காண்டாமிருகம் துரத்தியதில் வாகனம் கவிழ்ந்தது

காண்டாமிருகம் துரத்தியதில் வாகனம் கவிழ்ந்தது

1 mins read
f143c668-24c5-4a0f-9ce7-63ed83721c51
வயது மூத்த காண்டாமிருகம் ஒன்று ஜீப் வாகனத்தை நோக்கி ஓடிவர, அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாகனத்தை பின்னோக்கி ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது. படம்: டுவிட்டர் -

கோல்கத்தா: காண்டாமிருகம் ஒன்று ஜீப் வாகனத்தைத் துரத்தியதில், அந்த வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்தது. இதில், ஆறு சுற்றுப்பயணிகள் உட்பட எட்டு பேர் காயமடைந்தனர்.

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஜல்தபாரா தேசியப் பூங்காவில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இந்தப் பூங்காவுக்குச் சென்ற சுற்றுப்பயணிகள் அங்கிருந்த விலங்குகளைப் படங்களும் காணொளிகளும் எடுத்துக்கொண்டிருந்தனர். அப்போது, வயது மூத்த காண்டாமிருகம் ஒன்று ஜீப் வாகனத்தை நோக்கி ஓடிவர, அதன் தாக்குதலில் இருந்து தப்பிக்க வாகனத்தை பின்னோக்கி ஓட்டியபோது, கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் கவிழ்ந்தது.