புவனேஸ்வரம்: ஒடிசா மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் ஒன்பது தங்கச் சுரங்கங்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளதாக இரும்பு, சுரங்கங்கள் துறை அமைச்சர் ஃபிரஃபுல்லா மாலிக் சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் ஒடிசா மாநிலத்தின் தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எம்எல்ஏ ஒருவரின் கேள்விக்கு எழுத்துப் பூர்வமாக பதிலளித்த அமைச்சர், ஒடிசாவின் கியோஞ்சஜார், மயூர்பஞ்ச் ஆகிய மாவட்டங்களில் தலா நான்கு இடங்களிலும் தியோகார் மாவட்டத்தில் ஓர் இடத்திலும் பூமிக்கடியில் தங்கம் புதைந்து கிடப்பது கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

