லக்னோ: இந்தியாவின் உத்தரப் பிரதேச லக்னோ சிறப்பு என்ஐஏ நீதிமன்றம், ஐஎஸ்ஐஎஸ் போராளிகள் என்று சந்தேகிக்கப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது.
மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கான்பூர் பயங்கரவாத சதித்திட்டம் தொடர்பில் அவர்களுக்குத் தண்டனை கிடைத்தது.
பயங்கரவாதச் செயல்களை அரங்கேற்ற சதித்திட்டம் போட்டதன் தொடர்பில் அவர்கள் 2017ஆம் ஆண்டு கான்பூரில் கைது செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு எதிராக அதே ஆண்டு மார்ச் 8ஆம் தேதி வழக்கு பதியப்பட்டது.
வழக்கை விசாரித்த சிறப்பு என்ஐஏ நீதிமன்றம், குற்றவாளிகளுக்கு கடும் தண்டனை விதிப்பதை தவிர வேறு வழியில்லை என்று தெரிவித்தது.
தண்டனை விதிக்கப்பட்ட பயங்கரவாத ஐஎஸ்ஐஎஸ் சந்தேக நபர்கள், நாடு முழுவதும் குண்டு வெடிப்புகளைஅரங்கேற்ற சதித்திட்டம் தீட்டி இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்து இருந்தனர்.
மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏழு பேரும் குற்றவாளிகள் என்று நீதிமன்றம் முடிவு செய்தது.
அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது என்றும் எட்டாவது நபருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் அரசாங்க வழக்குரைஞர் கேகே சர்மா நேற்று தெரிவித்தார்.

