பாஜக ஊக்கம்

பாஜக ஊக்கம்

1 mins read
773c846b-1055-4f87-acfd-294c07c0f4ed
-

புதுடெல்லி: இந்தியாவில் இந்த ஆண்டில் 9 மாநில சட்டப்பேரவை தேர்தல் 2023 இல் நடக்க உள்ளது. இது, 2024ல் நடக்க உள்ள மக்களவை தேர்தலுக்கான அரை இறுதிப் போட்டியாகக் கருதப்படுகிறது.

இந்நிலையில், திரிபுரா, நாகாலாந்து, மேகாலயா மாநிலங்களுக்கான சட்டப்பேரவை தேர்தல் தற்போது முடிந்துள்ளது. அதன் முடிவுகள் இன்று வெளியாகின்றன. தேர்தல் முடிவுகள் பற்றிய கணிப்புகள் பாஜகவை உற்சாகப்படுத்தி உள்ளன.

இந்த வடகிழக்கு சிறு மாநிலங்களில் திரிபுரா, நாகாலாந்தில் பாஜக ஆட்சி அமைக்கும் எனவும் மேகாலயாவில் மட்டும் அக்கட்சிக்கு பத்திற்கும் குறைவான தொகுதிகள் கிடைக்கும் என்றும் பெரும்பாலான கணிப்புகள் தெரிவித்துள்ளன. இதனால் பாஜக பெரும் உற்சாகத்தில் இருக்கிறது.