பெங்களூரு: வாடகை வீட்டுக்கு முன் பணமாக லட்சக்கணக்கில் பணம் கேட்பதால் தனது இடது பக்க சிறுநீரகத்தை விற்கப் போவதாக ரம்யாக் ஜெயின், 34, என்பவர் பெங்களூரின் பல முக்கிய பகுதிகளிலும் விளம்பரப்படுத்தி இருந்தார்.
சமூக ஊடகங்களில் பரவி வரும் இவ்விளம்பரத்தை டுவிட்டரில் மட்டும் ஒரு லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவைச் சேர்ந்தவரான ரம்யாக் ஜெயின், "இந்திரா நகர் பகுதியில் வீடு தேடி களைத்துப் போய்விட்டேன். வீட்டு உரிமையாளர்கள் லட்சக்கணக்கில் கேட்கும் வாடகை, முன்பணத்தைக் கொடுக்க சிறுநீரகத்தை விற்கவேண்டிய நிலை ஏற்படலாம் என்பதைச் சுட்டிக் காட்டவே அவ்வாறு விளம்பரம் செய்தேன்,'' என அவர் குறிப்பிட்டுள்ளார்.
"முன் பணம் கொடுக்க இடது சிறுநீரகத்தையும் வீட்டுத் தரகருக்குப் பணம் கொடுக்க வலது சிறுநீர கத்தையும் விற்பீர்களா?" என ஒருவர் கேட்டுள்ளார்.

