அமராவதி: திருமலை திருப்பதி ஆலயத்தின் ஸ்ரீவாணி அறக்கட்டளை, ஆந்திர மாநிலத்தில் 3,000 கோயில்கள் கட்டுவதற்காக தலா ரூ.10 லட்சம் ஒதுக்கீடு செய்துள்ளது. இவற்றில், முதல்கட்டமாக 1,330 கோயில்களின் கட்டுமானப் பணிகள் தொடங்கியுள்ளன.
ஆந்திராவில் உள்ள ஒவ்வொரு மாவட்டத்திலும் கோயில்கள் இருப்பதை உறுதி செய்ய இம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியதை அடுத்து, கோவில் கட்டும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன.

