சச்சின், அலியா பட் பிரபலங்கள் பெயரில் கடனட்டை மோசடி

1 mins read
3b1d4f2a-c112-4a0f-8e3c-8714a5ee7fc6
-

புதுடெல்லி: இந்தித் திரையுலக நட்சத்திரங்கள், முன்னணி கிரிக்கெட் வீரர்கள் உள்ளிட்டோரின் நிரந்தரக் கணக்கு எண் (PAN) அட்டை விவரங்களைப் பயன்படுத்தி, மோசடியில் ஈடுபட்ட கும்பல் பிடிபட்டது.

இணையத்தில் கிடைக்கும் அந்தப் பிரபலங்களின் ஜிஎஸ்டி அடையாள எண்களைப் பயன்படுத்தி, அவர்களின் PAN அட்டை விவரங்களை அந்த மோசடிக் கும்பல் பெற்றதாகக் கூறப்படுகிறது.

சச்சின் டெண்டுல்கர், அலியா பட், அபிஷேக் பச்சன், ஷில்பா ஷெட்டி, மாதுரி தீட்சித், இம்ரான் ஹாஷ்மி, மகேந்திர சிங் டோனி, ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டோரின் பெயர்களை அக்கும்பல் பயன்படுத்திய தாக டெல்லி காவல்துறை துணை ஆணையர் ஷகத்ரா ரோகித் மீனா தெரிவித்த தாக 'பிடிஐ' செய்தி கூறியது. கடனட்டைகளைப் பயன்படுத்தி ரூ.21.32 லட்சம் மதிப்பிற்குப் பொருள்கள் வாங்கிய புனீத், முகம்மது ஆசிஃப், சுனில் குமார் உள்ளிட்ட ஐவரை டெல்லி காவல்துறை கைது செய்துள்ளது.