மனைவிக்காக ரூ.7 கோடியில் கோவில்

மனைவிக்காக ரூ.7 கோடியில் கோவில்

1 mins read
bec33c37-930f-4aac-8919-c955fe046a06
-

கேந்­தி­ர­பாரா: மனை­வி­யின் விருப்­பத்தை நிறை­வேற்­றும் வகை­யில், அவர் பிறந்த சிற்­றூ­ரில் ரூ.7 கோடி (S$1.152 மில்­லி­யன்) செல­வில் கோவில் கட்­டி­யுள்­ளார் இந்­தி­யா­வைச் சேர்ந்த தொழி­ல­தி­பர் ஒரு­வர்.

கேத்­ர­பாஷி லெங்கா, 62, என்ற அந்­தத் தொழி­ல­தி­ப­ரும் வைஜெ­யந்தி லெங்கா, 56, என்ற அவ­ரின் மனை­வி­யும் தெலுங்­கானா மாநி­லம், ஹைத ரா­பாத்­தில் வசிக்­கின்­ற­னர்.

ஒடி­சா­வின் சிக்னா எனும் சிற்­றூ­ரில் பிறந்த திரு­வாட்டி வைஜெ­யந்தி, குழந்­தைப் பரு­வத்­தி­லி­ருந்தே சந்­தோஷி மாதா­வின் தீவிர பக்தை.

"என் மனைவி, அவர் பிறந்த ஊரி­லி­ருக்­கும் ஒரு கோவி­லில் சந்­தோஷி மாதாவை வழி­ப­டு­வது போன்று கனவு கண்­டார். அத­னைத் தொடர்ந்து, என் மாம­னா­ரின் ஊரில் ஒன்­றரை ஏக்­க­ரில் ஒரு கோவில் கட்­டி­யுள்­ளேன். 2008ஆம் ஆண்­டில் தொடங்­கிய கட்­டு­மா­னப் பணி­கள் அண்­மை­யில்­தான் முடி­வ­டைந்­தன," என்­றார் திரு கேத்­ர­பாஷி.

திரு­வாட்டி வைஜெ­யந்தி விருப்­பப்­பட்­ட­படி தென்­னிந்­தி­யக் கட்­ட­டக் கலை வடி­வ­மைப்­பு­டன் அக்­கோ­யில் கட்­டப்­பட்­டுள்­ளது. சிவன், பிள்­ளை­யார், அனு­மார், நவக்­கி­ர­கங்­கள் ஆகிய கட­வுள்­க­ளை­யும் அக்­கோ­வி­லில் வழி­ப­ட­லாம் என்று திரு கேத்­ர­பாஷி குறிப்­பிட்­டார்.

இத்­தம்­ப­திக்கு மென்­பொ­ருள் பொறி­யா­ள­ரா­கப் பணி­யாற்­றும் ஒரு மக­னும் மருத்­து­வ­ராக இருக்­கும் ஒரு மகளும் உள்­ள­னர்.

கோவில் கட்டி, தங்­கள் தாயா­ரின் விருப்­பத்தை நிறை­வேற்­றும்­படி இரு­வ­ருமே தம்மை ஊக்­கு­வித்­த­தாக திரு கேத்­ர­பாஷி கூறி­னார்.

தங்­கள் ஊருக்கு கோவில் வந்­த­தால் சிக்­னா­வா­சி­களும் மகிழ்ச்சி அடைந்­துள்­ள­னர்.

மனைவிக்காக கேத்ரபாஷி லெங்கா கட்டியுள்ள சந்தோஷி மாதா கோவில். படம்: இந்திய ஊடகம்