'பாகுபலி': உலகின் முதல் மூங்கில் சாலைத் தடுப்பு

'பாகுபலி': உலகின் முதல் மூங்கில் சாலைத் தடுப்பு

1 mins read
931209da-b318-4f27-b194-4affb90ceb45
-

புது­டெல்லி: மகா­ராஷ்­டிரா மாநி­லத்­தின் சந்­தி­ராப்­பூர், யவத்­மால் மாவட்­டங்­களை இணைக்­கும் நெடுஞ்­சா­லை­யில், மூங்­கி­லால் சாலைத் தடுப்பு அமைக்­கப்­பட்­டுள்­ளது. உல­கி­லேயே முதல்­மு­றை­யாக இத்­த­கைய சாலைத் தடுப்பு அமைக்­கப்­பட்­டி­ருக்­கிறது.

மத்­திய சாலைப் போக்­கு­வரத்து அமைச்­சர் நிதின் கட்­காரி டுவிட்­ட­ரில் இந்­தத் தக­வலை வெளி­யிட்­டுள்­ளார்.

வாணி-வரோரா நெடுஞ்­சாலை­யில் 200 மீட்­டர் தொலை­விற்கு அமைந்­துள்ள இந்த மூங்­கில் சாலைத் தடுப்­பிற்கு 'பாகு­பலி' எனப் பெய­ரி­டப்­பட்­டுள்­ளது.

இந்­தூ­ரில் உள்ள தேசிய வாகன சோதனைத் தளம் உள்­ளிட்ட அரசாங்க அமைப்புகளில் இது தீவிர சோத­னைக்கு உட்­படுத்­தப்­பட்­டதாகக் கூறப்பட்டது.

ரூர்க்கி மத்­திய கட்­டட ஆராய்ச்சி நிறு­வ­னத்­தில் மேற்­கொள்­ளப்­பட்ட தீத் தடுப்பு சோத­னை­யில் மூங்­கில் சாலைத் தடுப்பு முதல் தரம் பெற்­றுள்­ளது.

பொது­வாக, சாலைத் தடுப்­பு­களை இரும்­பில் அமைப்­பது வழக்­கம். அவற்றின் மறு­ப­ய­னீட்டு விகி­தம் 30 முதல் 50 விழுக்­காடு மட்­டுமே. ஆனால் மூங்­கில் தடுப்பு­க­ளுக்கு இந்த விகி­தம் 50 முதல் 70 விழுக்­காடு.

"சாலைத் தடுப்­புக்கு 'பம்­புசா பால்கோ' என்ற மூங்­கில் வகை பயன்­ப­டுத்­தப்­ப­டு­கிறது. இதன் மீது மறு­ப­ய­னீடு செய்­யப்­பட்ட, அதிக அடர்த்­தி­யு­டன் கூடிய பாலி எத்­தி­லின் பூசப்­பட்­டுள்­ளது.

"மூங்­கில் துறைக்­கும், இந்­தி­யா­வுக்­கும் இது குறிப்­பி­டத்­தக்க சாதனை. இரும்­புத் தடுப்­பு­க­ளுக்கு சரி­யான மாற்­றாக விளங்­கும் மூங்­கில் தடுப்­பு­க­ளால் சுற்­றுச்­சூ­ழ­லுக்கு பாதிப்பு இல்லை. இது ஊரக, வேளாண் தொழி­லுக்கு ஏற்ற வகை­யில் அமைந்­துள்­ளது," என்று அமைச்­சர் கட்­காரி கூறி­யி­ருக்­கி­றார்.