லிபியாவில் சிக்கிய 12 இந்தியர்கள் மீட்பு

லிபியாவில் சிக்கிய 12 இந்தியர்கள் மீட்பு

1 mins read
e8922cc3-864b-4035-ae11-143c5a538517
-

புது­டெல்லி: துபா­யில் வேலை வாங்­கித் தரு­வ­தா­கக் கூறிய மோச­டிப் பேர்­வ­ழி­களை நம்­பிச் சென்று லிபி­யா­வில் சிக்­கித் தவித்த பஞ்­சாப்பை சேர்ந்த

12 இளை­யர்­களை இந்­திய வெளி­யு­ற­வுத் துறை மீட்­டுள்­ள­தாக அறி­வித்­துள்­ளது.

லிபி­யா­வில் அவர்­கள் கொத்­த­டிமை போல வேலை செய்­து­வந்­த­னர்.

இந்­நி­லை­யில் இது­கு­றித்து தக­வல் அறிந்த அவர்­க­ளின் உற­வி­னர்­கள் தேசிய சிறு­பான்­மை­யி­னர் ஆணை­யத்­தில் புகார் செய்­த­னர். இதை­ய­டுத்து அந்த ஆணை­யம் அதி­ரடி நட­வ­டிக்கை எடுத்து அந்த 12 பேரை­யும் மீட்டு இந்­தி­யா­வுக்கு அழைத்து வந்­துள்­ளது. இது­பற்றி கூறிய அந்த ஆணை­யத் தலை­வர் இக்­பால் சிங், "பஞ்­சாப்பை சேர்ந்த 12 பேரி­டம் ஆசை வார்த்தை கூறி துபாய்க்கு அழைத்­துச் செல்­வ­தாக சிலர் தெரி­வித்­துள்­ள­னர். அதை நம்­பிப் பணத்­தைச் செலுத்தி இவர்­கள் சென்­றுள்­ள­னர். ஆனால் அந்த மோச­டிப் பேர்­வ­ழி­கள் அவர்­களை துபாய் வழி­யாக லிபி­யா­வுக்கு அழைத்­துச்­சென்று அங்கு கொத்­த­டி­மை­க­ளாக விற்­று­விட்­டுத் தப்­பி­விட்­ட­னர்," என்று கூறி­னார்.