தெலுங்கானா முதல்வர் மகளுக்கு அழைப்பாணை

2 mins read
927bce86-a980-41dd-8071-bdd54bb11264
-

புது­டெல்லி: டெல்லி மது­பானக் கொள்கை முறை­கேடு தொடர்­பில் தெலுங்­கானா முதல்­வ­ரான சந்­தி­ர­சே­கர ராவுக்கு நெருக்­கடி ஏற்­பட்­டுள்­ளது.

அவ­ரது மகள் எம்­எல்­சி­யான கவி­தா­வுக்கு அழைப்­பாணை அனுப்­பப்­பட்­டுள்­ளது.

டெல்லி மது­பானக் கொள்கை முறை­கேடு வழக்­கில் கவி­தா­வுக்குத் தொடர்பு இருப்­ப­தாக அம­லாக்கப் பிரிவு வழக்கு பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

இந்த நிலை­யில் ஆம் ஆத்மி கட்­சித் தலை­வர்­க­ளுக்கு ரூ.100 கோடி நன்­கொடை வழங்­கிய 'சவுத் குரூப் இன்­டோஸ்­பி­ரிட்ஸ்' நிறு­வ­னத்­தில் கவிதா சார்­பில் அருண் பங்­கு­தா­ர­ராக உள்­ள­தாக கூறப்­ப­டு­கிறது.

மேலும், மது­பானக் கொள்கை முறை­கேடு மூலம் கிடைத்த வரு­மா­னம் ரூ.296 கோடி­யாக இருக்­க­லாம் என குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

இதில் ஒரு பகுதி அருண் ராமச்­சந்­திர பிள்­ளைக்காக அசை­யும் மற்­றும் அசை­யாப் பொருட்­கள் வாங்­கு­வ­தற்கு பயன்­ப­டுத்­தப்­ பட்­ட­தாக நம்­பப்­படுகிறது.

டெல்­லி­யில் உள்ள அம­லாக்கப்பிரிவு அலு­வ­ல­கத்­தில் சென்ற திங்­கள்­கி­ழமை அருண் ராமச்­சந்­திர பிள்­ளை­யி­டம் அதி­கா­ரி­கள் நீண்டநேரம் விசா­ரணை நடத்தி இர­வில் அவரை கைது செய்­த­னர்.

மறு­நாள் செவ்­வாய்க்கிழமை சிபிஐ அதி­கா­ரி­கள் அவரை டெல்­லி­யின் ரோஸ் அவென்­யூ­வில் உள்ள சிறப்பு நீதி­மன்­றத்­தில் முன்­னி­லைப்படுத்­தி­னர்.

அப்­போது கவி­தா­வின் பினா­மி­யாக அருண் ராமச்­சந்­திர பிள்ளை இருப்­ப­தாக நீதிமன்­றத்­தில் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் அவ­ரி­டம் அம­லாக்­கப் பிரிவு அதி­கா­ரி­கள் விசா­ரணை நடத்த ஒரு வாரம் நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யது.

இந்த விசா­ர­ணை­யில் அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் பல குற்­றச்சாட்­டு­களை அறிக்­கை­யாக முன்வைத்­த­னர்.

டெல்லி மது­பான வழக்­கில் சரத் சந்­திர ரெட்டி, மகுண்ட சீனி ­வா­சலு ரெட்டி, மகுண்ட ராகவ், எம்.எல்.சி. கே. அருண் ராமச்­சந்­திர பிள்ளை, எம்.எல்.சி. கவிதா ஆகியோர் முக்­கிய நபர்­கள் என அதி­கா­ரி­கள் குறிப்பிட்டுள்ளனர்.

அருண் ராமச்­சந்­திர பிள்ளை, அபி­ஷேக் போயின்­பள்ளி, புச்­சி­பாபு ஆகி­யோர் வெளி­யில் தர­கர்­க­ளா­கச் செயல்­பட்­ட­தா­க­வும் தெரி­விக்­கப்­பட்­டது.

இந்த நிலை­யில் கவிதா டெல்­லி­யில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் வெள்­ளிக்கிழமை முன்­னி­லை­யாக அழைப்­பாணை அனுப்­ப­ப்பட்­டது. இந்­தச் சம்­ப­வம் தெலுங்­கா­னா­வில் பெரும் பர பரப்பை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது.

இதற்­கி­டையே வழக்கில் திகார் சிறை­யில் அடைக்­கப்பட்டு உள்ள முன்­னாள் டெல்லி துணை முதல்­வர் மணீஷ் சிசோ­டியா மற்ற கைதி­க­ளு­டன் அடைக்­கப்­பட்­டுள்­ள­தாக ஆம் ஆத்மி கட்­சி­யின் தேசிய செய்­தித் தொடர்­பா­ளர் சவு­ரப் பரத்­வாஜ் குற்­றம் சாட்­டி­உள்­ளார்.

மதுபானக் கொள்கை முறைகேட்டு வழக்கு; சந்திரசேகர ராவுக்கு நெருக்கடி