நாடெங்கும் பரவும் கடுமையான சளிக்காய்ச்சல்; மருந்து விற்பனை 25% அதிகரிப்பு

நாடெங்கும் பரவும் கடுமையான சளிக்காய்ச்சல்; மருந்து விற்பனை 25% அதிகரிப்பு

1 mins read
5484dc8b-77a1-42e4-81ab-fbb98726ece2
-
Google News Preferred Icon

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கடு­மை­யான இரு­மல், சளி, காய்ச்­சல் நோய்த் தொற்று அதி­க­ரித்து வரு­கிறது. இருந்­தா­லும் உரிய சிகிச்­சையை மேற்­கொண்­டால் ஆறு நாட்­களில் குண­ம­டைந்­து­வி­ட­லாம் என்று மருத்­து­வ­மனை வட்­டா­ரங்­கள் தெரி­விக்­கின்­றன.

ஃபுளூ காய்ச்­சல் நுரை­யீ­ர­லைப் பாதிக்­கக்­கூ­டி­யது. இரண்டு முதல் 6 நாட்­கள் வரை காய்ச்­சல் நீடிக்­கும். சளி, உடல் வலி, தலை­வலி, இரு­மல், தொண்டை கர கரப்பு போன்ற பிரச்­சி­னை­கள் ஏற்­படும். பெரி­ய­வர்­கள் முதல் குழந்­தை­கள் வரை பாதிப்பு ஒரே மாதி­ரி­யா­கத்­தான் இருக்­கும். ஆனால் குழந்­தை­க­ளுக்கு நிமோ­னியா எனப்­படும் உட­லில் நீர் இழப்பு மற்­றும் நீர் பற்­றாக்­குறை அதி­க­மாக ஏற்­பட்­டால் காய்ச்­சல் வந்­த­வு­டன் தாம­திக்­கா­மல் மருத்­து­வரை அணு­கு­வது அவ­சி­யம். புளூ காய்ச்­ச­லு­டன் எச்1என்1 என்­னும் ஒரு­வகை இன்­பு­ளூ­யென்சா வைரஸ் கிருமித்தொற்று தற்­போது அதி­க­ரித்து வரு­கிறது. இந்­தியா முழு­வ­தும் காய்ச்­சல் மற்­றும் சுவாச நோய்த்­தொற்­று­க­ளின் அதி­க­ரிப்பு கார­ண­மாக நுண்­ணு­யிர் எதிர்ப்பு மருந்­து­கள், இரு­மல் மருந்­து­கள் மற்­றும் தொற்று எதிர்ப்பு மருந்­து­க­ளின் விற்­பனை வேக­மெ­டுத்­துள்­ளது.

காய்ச்­சல் மருந்­து­க­ளான பாரா­சிட்­ட­மால், அசித்­ரோ­மை­சின், இரு­மல் மருந்து விற்­பனை குறிப்­பி­டத்­தக்க அள­வில் உயர்ந்­துள்­ளது. கடந்த மாதம் மருந்­து ­க­ளின் விற்­பனை 20 முதல் 25 விழுக்­காடு அள­வுக்கு அதி­க­ரித்­தது.