ராணுவத்தினர் சீன கைப்பேசி பயன்படுத்த வேண்டாம்

ராணுவத்தினர் சீன கைப்பேசி பயன்படுத்த வேண்டாம்

2 mins read
bf286806-cf22-4475-8e2c-3afa120b39c1
சீனா­வில் தயா­ரிக்­கப்­படும் கண்­கா­ணிப்­புக் கரு­வி­களை இந்­திய நிறு­வ­னங்­களும் தனி நபர்­களும் அதிக அள­வில் பயன்­படுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள நைனோங், இந்­தக் கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் சீனா­வுக்­கான காது­க­ளா­க­வும் கண்­க­ளா­க­வும் செயல்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார். படம்: பிக்ஸாபே -

எளிதில் ஊடுருவ இயலும் என மத்திய உளவு அமைப்புகள் எச்சரிக்கை

புது­டெல்லி: இந்­திய ராணுவ வீரர்­களும் அவர்­தம் குடும்­பத்­தா­ரும்்்் சீனா­வில் தயா­ரிக்­கப்­பட்ட கைப்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்தக் கூடாது என இந்­திய பாது­காப்­புத்­து­றை­யும் உளவு அமைப்­பு­களும் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­தாக ஊட­கத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

சீனா­வில் தயா­ரிக்­கப்­படும் கைப்­பே­சிக் கரு­வி­களில் மூன்­றாம் தரப்­பி­ன­ரால் எளி­தில் ஊடு­ருவ முடி­யும் என நிபு­ணர்­கள் எச்­ச­ரிக்கை விடுத்­துள்­ள­னர் என்­றும் அதை­ய­டுத்தே ராணு­வத்­தி­ன­ருக்கு எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ள­தா­க­வும் அச்­செய்­தி­யில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

சீனா­வில் தயா­ரிக்­கப்­படும் கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள், கைப்­பே­சி­க­ளின் நம்­ப­கத்­தன்மை குறித்து பல்­வேறு கேள்­வி­கள் எழுந்­துள்­ளன.

இது­கு­றித்து அரு­ணாச்­சல பிர­தேச மாநில எம்­எல்­ஏ­வான நைனோங் எரிங் அண்­மை­யில் பிர­த­மர் மோடிக்கு கடி­தம் எழுதி இருந்­தார்.

அதில், இந்­தி­யச் சந்­தை­யில் மிகக் குறைந்த விலைக்கு விற்­கப்­படும் கைப்­பே­சி­க­ளால் இந்­தி­யா­வுக்­குப் பாது­காப்பு அச்­சு­றுத்­தல்­கள் ஏற்­பட்­டுள்­ள­தாக அவர் குறிப்­பிட்­டி­ருந்­தார்.

சீனா­வில் தயா­ரிக்­கப்­படும் கண்­கா­ணிப்­புக் கரு­வி­களை இந்­திய நிறு­வ­னங்­களும் தனி நபர்­களும் அதிக அள­வில் பயன்­படுத்­து­வ­தா­கக் குறிப்­பிட்­டுள்ள நைனோங், இந்­தக் கண்­கா­ணிப்­புக் கரு­வி­கள் சீனா­வுக்­கான காது­க­ளா­க­வும் கண்­க­ளா­க­வும் செயல்­ப­டு­வ­தா­கத் தெரி­வித்­துள்­ளார்.

"இந்­திய நிறு­வ­னங்­களை குறி­வைக்­கும் இணைய ஊடு­ரு­வல்­கா­ரர்­க­ளுக்கு இவை உத­வி­க­ர­மாக உள்­ளன. இது தொடர்­பாக அமெ­ரிக்க இணை­யப் பாது­காப்பு நிறு­வ­னங்­கள் விடுத்­தி­ருக்­கும் எச்­ச­ரிக்­கையைப் புறக்­க­ணிக்­கக் கூடாது," என்­கி­றார் நைனோங்.

இந்­நி­லை­யில், பல்­வேறு வகை­யான சீன கைப்­பே­சிக் கரு­வி­கள் குறித்து ராணு­வப் பணி­யா­ளர்­க­ளுக்கு விழிப்­பு­ணர்வு ஏற்­ப­டுத்­தப்­பட வேண்­டும் என உள­வுத்­துறை மத்­திய அர­சுக்கு அறி­வு­றுத்தி உள்­ள­தா­கத் தெரி­கிறது.

நாடு முழு­வ­தும் ஏறத்­தாழ 20 லட்­சம் சீன கண்­கா­ணிப்­புக் கருவி­கள் பொருத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் அவற்­றைப் பயன்­ப­டுத்த மத்­திய அரசு தடை­வி­திக்க வேண்­டும் என்­றும் அவர் வலி­யு­றுத்தி உள்­ளார்.

இந்­நி­லை­யில், இந்­திய ராணு­வத்­தின் முப்­ப­டை­களில் பணி­யாற்றி வரும் ராணுவ வீரர்­க­ளின் குடும்­பத்­தி­னர் சீன கைப்­பே­சி­க­ளைப் பயன்­ப­டுத்த தடை விதிக்க வேண்­டும் என்று மத்­திய பாது­காப்­பு அமைச்­சின் உள­வுப்­பி­ரிவு ராணுவ நிர்­வா­கத்­துக்கு அறி­வு­றுத்தி இருப்­ப­தாக ஊட­கச் செய்­தி­கள் தெரி­விக்­கின்­றன.

சீன கைப்­பே­சி­க­ளைப் பயன்­படுத்­து­வ­தால் பாது­காப்பு பிரச்­சினை ஏற்­ப­டக்­கூ­டும் என்­றும் சீன கைப்­பே­சி­களில் உளவு பார்க்­கும் தொழில்­நுட்­பம் இருப்­ப­தாகச் சந்­தே­கம் எழுந்­துள்­ளது என்­றும் உள­வுப் பிரிவு தெரி­வித்­துள்­ளது.

ஏற்­கெ­னவே டிக்­டாக் உள்­ளிட்ட சீனா­வின் கைப்­பேசி செய­லி­கள் பல­வற்றை இந்­தியா தடை செய்­துள்­ளது. தற்­போது கைப்­பேசி கரு­வி­க­ளை­யும் பயன்­ப­டுத்த வேண்­டாம் என அறி­விக்­கும் நிலை ஏற்­பட்­டுள்­ளது.

மேலும், சீனா­வு­டன் நெருங்­கிய தொடர்­பு­டைய பிற நாடு­க­ளைச் சேர்ந்த நிறு­வ­னங்­க­ளின் கைப்­பேசி செய­லி­க­ளுக்­கும் இந்­தி­யா­வில் தடை விதிக்­கப்­பட்­டுள்­ளது.