2வது முறையும் விசாரணைக்கு வராத தேஜஸ்வி யாதவ்

2வது முறையும் விசாரணைக்கு வராத தேஜஸ்வி யாதவ்

2 mins read
1ca8eca2-f130-434a-a661-dcf212236067
-

பல மணி நேர விசாரணையால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணி மனைவியை மருத்துவமனையில் சேர்த்துள்ளதாக தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார்.

புது­டெல்லி: நில­மோ­சடி வழக்­கில் லாலு பிர­சாத் யாத­வின் மக­னும், பீகார் துணை முதல்­வ­ரு­மான தேஜஸ்வி யாத­வுக்கு சிபிஐ இரண்­டா­வது முறை­யாக நேற்று சம்­மன் அனுப்­பி­யது.

ஆனால் அவர் முன்­னி­லை­யாக வில்லை.

மத்­திய அர­சாங்­கத்­தில் ரயில்வே அமைச்­ச­ராக லாலு பிர­சாத் யாதவ் இருந்­த­போது, ரயில்­வே­யில் வேலை வழங்­கும் விவ­கா­ரத்­தில் முறை­கே­டு­கள் நடந்­த­தாக புல­னாய்வு அமைப்­பு­கள் தெரி­விக்­கின்­றன.

குறிப்­பாக, வேலை பெற்­ற­வர்­கள் தங்­க­ளின் நிலங்­களைப் பரி­சாக அல்­லது குறைந்த விலைக்கு லாலு­வின் குடும்ப உறுப்­பி­னர்­கள் மற்­றும் பினா­மி­க­ளின் பெயர்­ களுக்கு எழு­தித் தந்­தி­ருப்­ப­தா­க­வும் இதன் மூலம் பல கோடி ரூபாய் மோசடி நடந்­தி­ருப்­ப­தா­க­வும் கூறப்­ப­டு­கிறது.

இந்த விவ­கா­ரம் தொடர்­பில் லாலு பிர­சாத் யாத­வும் விசா­ரிக்­கப்­பட்டு வரு­கி­றார்.

அண்­மை­யில் பாட்னா மற்­றும் டெல்­லி­யில் உள்ள லாலு பிர­சாத் யாத­வின் வீடு உள்­ளிட்ட 24 இடங்­களில் அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் சோதனை நடத்­தி­னர்.

பீகார் துணை முதல்­வர் தேஜஸ்வி யாத­வின் டெல்லி வீட்­டி­லும் இந்­தச் சோதனை நடந்­தது. இதில் ரூ. 53 லட்­சம் ரொக்­கம், 540 கிராம் தங்­கம், 1.5 கிலோ தங்க நகை­கள் உள்­ளிட்­டவை கைப்­பற்­றப்­பட்­ட­தாகத் தக­வல் வெளி­யா­னது.

இந்த நிலை­யில், தேஜஸ்வி யாத­வி­டம் விசா­ரணை நடத்த திட்­ட­மிட்­டுள்ள சிபிஐ, அவ­ருக்கு கடந்த மாதம் 4ஆம் தேதி அழைப்­ பாணை அனுப்­பி­யது. ஆனால் விசா­ர­ணைக்கு தேஜஸ்வி யாதவ் முன்­னி­லை­யா­க­வில்லை. இத­னால் சிபிஐ நேற்று மீண்­டும் அவ­ருக்கு அழைப்­பாணை அனுப்­பி­யது.

ஆனால் அவ­ரது கர்ப்­பிணி மனைவி மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­டுள்­ள­தால் இம்­மு­றை­யும் முன்­னி­லை­யாக முடி­யாது என்று தேஜஸ்வி யாதவ் சிபி­ஐ­யி­டம் தெரி­வித்­துள்­ள­தா­கக் கூறப் ­ப­டு­கிறது.

அம­லாக்­கத் துறை­யின் சோத­னைக்­குப் பிறகு தேஜஸ்வி யாத­வின் மனைவி நேற்று முன்­தி­னம் தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­தா­க­வும் பல மணி நேர விசாரணையால் உயர் ரத்த அழுத்­தத்­தால் அவர் பாதிக்­கப்­பட்­ட­தா­க­வும் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.