'புதிய வகை கிருமி காய்ச்சல் படிப்படியாகக் குறையும்'

'புதிய வகை கிருமி காய்ச்சல் படிப்படியாகக் குறையும்'

2 mins read
a01d50ae-47bf-4488-b070-88df8fa99dfa
இந்­தி­யா­வில் கிரு­மிக் காய்ச்­சல் அதி­வே­க­மா­கப் பரவி வரு­கிறது. நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு ஆய்­வ­கங்­களில் நடந்த பரி­சோ­த­னை­யில் 3,038 பேருக்கு இன்­பு­ளூ­யன்சா காய்ச்­சல் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது. படம்: த இந்தியன் எக்ஸ்பிரஸ் -
Google News Preferred Icon

புது­டெல்லி: இந்­தி­யா­வில் கிரு­மிக் காய்ச்­சல் அதி­வே­க­மா­கப் பரவி வரு­கிறது. நாடு முழு­வ­தும் உள்ள பல்­வேறு ஆய்­வ­கங்­களில் நடந்த பரி­சோ­த­னை­யில் 3,038 பேருக்கு இன்­பு­ளூ­யன்சா காய்ச்­சல் இருப்­பது உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

எச்3என்2 கிருமி உள்­ளிட்ட சில வகை கிருமி நோய்­களும் உறுதி செய்­யப்­பட்டு உள்­ளன. கடந்த ஜன­வ­ரி­யில் 1,245 பேருக்­கும் பிப்­ர­வ­ரி­யில் 1,307 பேருக்­கும் இம்­மா­தம் 9ஆம் தேதி வரை 486 பேருக்­கும் கிருமி உறுதி செய்­யப்­பட்டு உள்­ளது.

இந்த நிலை­யில் சாதா­ரண பரு­வ­நிலை காய்ச்­ச­லாக இருந்­தா­லும் புதிய வகை கிருமி தாக்­கம் குழந்­தை­க­ளை­யும் முதி­ய­வர்களை­யும் உயி­ரி­ழக்­கும் நிலைக்குக் கொண்டு செல்­கிறது. இந்த காய்ச்­ச­லுக்கு கர்­நா­டகா, அரி­யானா மாநி­லங்­களில் தலா ஒரு­வர் என இரண்டு பேர் இறந்­து­விட்­ட­னர். இதற்­கி­டையே அனைத்து மாநி­லங்­க­ளை­யும் மத்­திய சுகா­தார அமைச்சு விழிப்­பு­டன் இருக்­கு­மாறு கேட்­டுக் கொண்­டுள்­ளது. "ஆண்­டு­தோ­றும் ஜன­வரி முதல் மார்ச் வரை­யி­லும் அதன் பிறகு மற்றொரு பகுதியாகவும் பரு­வ­கால கிருமி காய்ச்­சல் இரண்டு கட்­டங்­க­ளாகப் பர­வு­கிறது. தற்­போது பர­வும் எச்3என்2 கிருமி காய்ச்­சல் இம்­மாத இறு­தி­யில் குறை­யத் தொடங்­கும். எச்3என்2 கிருமி தவிர எச்1என்1 கிரு­மிப் பாதிப்­பும் அதி­க­ரித்து வரு­கிறது. இது மிக அதி­க­மாக தமிழ்­நாட்­டில் பர­வி­யி­ருக்­கிறது. இது­வரை 545 பேருக்கு இவ்­வகை கிரு­மிப் பாதிப்பு உறுதி செய்­யப்­பட்­டுள்­ளது.

மகா­ராஷ்டிராவில் 170 பேர், குஜ­ராத்­தில் 74 பேர், கேர­ளா­வில் 42 பேர், பஞ்­சாப்­பில் 28 பேர் பாதிக்­கப்­பட்­டுள்­ள­னர். எச்1என்1 காய்ச்­ச­லுக்கு 'ஆசெல்­டா­மி­விர்' (Oseltamivir) என்ற மருந்தை உலக சுகா­தார அமைப்பு பரிந்­து­ரைத்­துள்­ளது. இதே மருந்தை எச்3என்2 காய்ச்­ச­லுக்­கும் கொடுக்­க­லாம் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இந்­தி­யா­வில் இந்த மருந்து பொது­மக்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­படுகிறது," என்று சுகாதாரத் துறை அறிக்கை குறிப்பிட்டது.