பெங்களூரு: உலகின் ஆக நீளமான ரயில்வே நடைமேடை இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் அமைக்கப்படவுள்ளது.
ஹுபலி நகரில் உள்ள ஸ்ரீ சித்தாரூடா ரயில்வே நிலையத்தில் 1.5 கிலோமீட்டர் நீளம்கொண்ட அந்த நடைமேடை கட்டப்படும்.
இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமையன்று (12 மார்ச்) அதற்கான அடிக்கல் நாட்டினார்.

