புதுடெல்லி: தாம் புதிதாக வாங்கிய காலணிகள் மீது இயற்கை உபாதையைக் கழித்த நாயைக் கொன்றதுடன், அது இறந்து கிடப்பதைப் புகைப்படம் எடுத்து, சமூக ஊடகத்தில் வெளியிட்ட இளையர் கைதானார்.
தேனி மாவட்டத்தைச் சேரந்்த 25 வயதான தினேஷ் என்ற அந்த ஆடவர், கட்டுமானத் தொழிலாளராகப் பணியாற்றி வருகிறார். கடந்த 9ஆம் தேதி அன்று அவர் தனது சமூக ஊடகப் பக்கத்தில் இறந்து கிடக்கும் நாயின் படத்தை வெளியிட்டு, அதற்கான காரணத்தையும் குறிப்பிட்டிருந்தார்.
இதைக் கண்டு ஈரோட்டைச் சேர்ந்த விலங்குகள் நல அமைப்பின் உறுப்பினர் பிரேம் குமார் என்பவர் கடும் அதிர்ச்சி அடைந்து, காவல்துறையில் புகார் அளித்ததை அடுத்து, தினேஷை காவல்துறை கைது செய்துள்ளது.

