மனைவிமீது கோபம்; மாமியார் மூக்கை அறுத்த மருமகன்

மனைவிமீது கோபம்; மாமியார் மூக்கை அறுத்த மருமகன்

1 mins read
eb894660-0f5a-41e6-b442-c582c9664ea1
-

போபால்: மனைவி பிரிந்­த­தால் ஆத்­தி­ர­ம­டைந்த ஒரு­வர், தன் மனைவி மீதுள்ள கோபத்தை மாமி­யார்மீது காட்­டி­யுள்­ளார். மக­ளுக்­கும் மரு­ம­க­னுக்­கும் இடை­யி­லான சண்­டையை தீர்த்துவிடச் சென்ற மாமி­யா­ரின் மூக்கை மரு­ம­கன் அறுத்து­விட்­ட­தால் அவர் மருத்­து­வ­மனை­யில் சிகிச்சை பெற்­று­வ­ரு­கி­றார்.

மத்­தி­யப்­பி­ர­தேச மாநி­லம், மோர்­னியா மாவட்­டம், சந்­தப்­பூர் கிரா­மத்­தைச் சேர்ந்­த­வர்­கள் ரஹ்­மத் பகேல், ராம் விலாசி தம்­ப­தி­யர். இவர்­க­ளது மகள் ஷியாம் சுந்­த­ரிைய பக்­கத்து ஊரில் வசிக்­கும் ராஜு பாகேல் என்­ப­வர் அண்­மை­யில் திரு­ம­ணம் செய்­து­கொண்­டார்.

மரு­ம­கன் ராஜு பாகேல் தன் மனைவி ஷியாம் சுந்­த­ரியை அடிப்­பது வழக்­கம். இத­னால் மன உளைச்­ச­லுக்கு ஆளான ஷியாம் சுந்­தரி, காவல் நிலை­யத்­தில் புகார் அளித்து விட்டு, தனி­யா­க வாழ்ந்து வருகிறார்.

இந்­நி­லை­யில், மக­ளைப் பார்க்க வந்த பெற்­றோ­ரி­டம் "இனி தன்­னால் கண­வ­ரு­டன் சேர்ந்து வாழ­மு­டி­யாது," என ஷியாம் சுந்­தரி கூறி­யுள்­ளார்.

இதை­ய­டுத்து, அங்­கி­ருந்து கிளம்­பிய மனை­வி­யின் பெற்­றோ­ரு­டன் மரு­ம­கன் ராஜு தனது இரு உறவினர்களு­டன் சேர்ந்து வம்­பி­ழுத்­துள்­ளார். அத்­து­டன், திடீ­ரென கோபத்­தில் மாமியாரின் மூக்கை அறுத்­து­விட்டு தப்பி ஓடி­விட்­டார்.

இது­கு­றித்து காவ­லர்­கள் விசா­ரித்து வரு­கின்­ற­னர். தனது மனை­வியை மாமி­யார் தான் தூண்­டி­விட்டு பிரச்­சினை உரு­வாக்­கு­வ­தாகக் கூறி மரு­ம­கன் ராஜு மூக்கை அறுத்­த­தாகக் கூறப்­ப­டு­கிறது.