10 பெண்களை மணந்த கல்யாண மன்னன் கைது

10 பெண்களை மணந்த கல்யாண மன்னன் கைது

14 Mar 2023 - 5:30 am

1 mins read

திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரஷீத், 41. இவர் அண்மையில் மானந்தவாடியைச் சேர்ந்த ஒரு பெண்ணைத் திருமணம் செய்து, ஒரு சில மாதங்களில் வீட்டில் இருந்த நகை, பணத்தை எல்லாம் சுருட்டிக்கொண்டு தலைமறைவாகி விட்டார். அதன்பின்னர் அவர் வீடு திரும்பாததால், பெண்ணின் வீட்டார் இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதையடுத்து தலைமறைவான ரஷீத்தை கைது செய்து காவலர்கள் விசாரித்தபோது, ரஷீத் இதுபோல 10க்கும் மேற்பட்ட பெண்களைத் திருமணம் செய்து நகை, பணத்தைச் சுருட்டியது தெரியவந்தது.