அசாம் மாநிலத்தின் கர்பி அங்லாங் மாவட்டத்தில் காவல்துறையினரும் மத்திய ரிசர்வ் காவல் படையினரும் இணைந்து நடத்திய அதிரடி சோதனையில், ரூ.20 கோடி மதிப்புள்ள ஐந்து கிலோ ஹெராயினைக் கைப்பற்றி, போதைப்பொருள் கடத்தல் காரரைக் கைது செய்தனர். ஞாயிறன்று இரவு அசாம்-நாகாலாந்து எல்லையில் சோதனை செய்தபோது இந்த ஹெராயின் மீட்கப்பட்டது.
வாகனத்தின் மேல் பகுதியில் ஒரு ரகசிய அறையை அமைத்து அதில் போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்தி வந்ததை காவலர்கள் கண்டுபிடித்தனர்.
படம்: ஏஎன்ஐ ஊடகம்

