பணிகள் முடிக்கப்படாமல் திறக்கப்பட்டதால் சர்ச்சை

பணிகள் முடிக்கப்படாமல் திறக்கப்பட்டதால் சர்ச்சை

1 mins read
ed2b6c91-f24f-47ef-959f-9b46437757b9
-
Google News Preferred Icon

கர்நாடகா: பெங்­க­ளூரு-மைசூரூ இடை­யிலான அதி­வி­ரை­வுச் சாலைப் பணி­கள் முழு­மை­யாக முடி­வ­டை­யா­மல் அத­னைப் பிர­த­மர் நரேந்­திர மோடி நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்­துள்­ள­தா­கக் குற்­றச்­சாட்டு எழுந்­துள்­ளது.

காங்­கி­ரஸ் ஆட்­சிக் காலத்­தில் அறி­விக்­கப்­பட்ட பெங்­க­ளூரு-மைசூரூ தேசிய நெடுஞ்­சா­லைத் திட்­டத்­துக்கு 2018ல் கர்­நா­ட­கா­வில் ஆளும் காங்­கி­ரஸ் அரசு ஒப்­பு­தல் தந்து நிதி ஒதுக்­கி­யது.

அதி­வி­ரை­வுச் சாலைப் பணி­கள் நடந்­து­வந்த நிலை­யில், நேற்று முன்­தி­னம் கர்­நா­டகா வந்த பிர­த­மர் மோடி அதனை நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்­தார்.

இதன்மூலம் மைசூ­ரு­வில் இருந்து பெங்­க­ளூ­ரு­வுக்கு 75 நிமி­டங்­களில் செல்­ல­லாம் எனத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

ஆனால், 118 கிலோ மீட்­டர் தூரம் கொண்ட இந்­தச் சாலை­யில் இன்­னும் 21 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு பணி­கள் முழு­மை­யாக முடிக்­கப்­ப­டா­மல் உள்­ள­தாக காங்­கி­ரஸ் குற்­றம்­சாட்­டி­யுள்­ளது.

கர்­நா­டக சட்­டப்பேர­வைத் தேர்­த­லுக்கு இன்­னும் இரு மாதங்­களே உள்ள நிலை­யில், பணி­கள் முடி­வ­டை­யாத சாலை யைப் பிர­த­மர் மோடி நாட்­டுக்கு அர்ப்­ப­ணித்து, மக்­க­ளின் பாது­காப்­புக்கு ஆபத்து விளை­விப்­ப­தா­கவும் காங்­கி­ரஸ் சாடி­யுள்­ளது.

முடிவ­டை­யாத சாலை பற்­றிய காணொ­ளியை நடி­கர் பிர­காஷ் ராஜும் தனது டுவிட்­டர் பக்­கத்­தில் பகிர்ந்­துள்­ளார்.