குழந்தைகள் அதிகம் பாதிப்பு

குழந்தைகள் அதிகம் பாதிப்பு

2 mins read
d27d66db-b538-40eb-9c95-a4d236b43c9f
-

புனே: இந்­தி­யா­வில் பர­வ­லாக இன்­ஃப்­ளூ­யன்சா ஏ வகை வைர­ஸான எச்3என்2 தொற்று பர­வத் தொடங்­கி­யுள்­ளது. இத்தொற்றால் 10ல் ஆறு குழந்தைகள் பாதிக் கப்படுவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக சளி, மூக்கு ஒழுகு தல், காய்ச்சல் போன்ற அறிகுறி களுடன் அதிகமானோர் வருவ தாகத் தெரிவிக்கின்றனர். இதுபோல், கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்பட் டுள்ளதாக குழந்தைகள் நல மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சளி அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 30-40% அதிகரித்திருப்பதாக டெல்லியைச் சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தினேஷ் ராஜ் கூறியுள்ளார்.

இந்தத் தொற்றுப் பாதிப்­பால் மருத்­து­வ­ம­னை­க­ளின் தீவிர சிகிச்­சைப் பிரி­வில் அனுமதிக்கப் பட்டிருக்­கும் 5 வய­துக்­குட்­பட்­ட குழந்­தை­க­ளின் எண்­ணிக்கை திடீ­ரென அதி­க­ரித்து வரு­வது கவலை அளிப்­ப­தாக மருத்­து­வர்­கள் தெரி­வித்­துள்­ள­னர்.

நேஷ­னல் இன்ஸ்­டி­டி­யூட் ஆஃப் வைரா­லஜி (என்­ஐவி) தரவு­க­ளின்­படி, இந்த ஆண்டு ஜன­வரி முதல் புனே­யில் சோதிக்­கப்­பட்ட 2,529 மாதி­ரி­களில் 428 பேருக்கு (17%) தொற்று இருந்­தது தெரி­ய­வந்­தது.

என்ஐவி விஞ்ஞானி டாக்டர் வர்ஷா போட்தார் கூறுகையில், புனே மாவட்டத்தில் கடுமையான சுவாச அறிகுறிகளுடன் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளின் மாதிரிகள் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

பாரதி மருத்­து­வ­ம­னை­யின் குழந்தை மருத்­துவ சிகிச்­சைப் பிரி­வுக்கான மருத்துவர் பக்தி சாரங்கி கூறுகையில், "கடந்த நான்கு முதல் ஆறு வாரங்­க­ளாக இங்­குள்ள தீவிர சிகிச்­சைப் பிரிவு நிரம்பி வழிகிறது. அதி­க­ள­வில் பாதிக்­கப்பட்­டுள்ள கைக்­கு­ழந்­தை­கள், பாலர் குழந்­தை­களில் ஒரு­சி­லர் கல்­லீ­ரல், ரத்த அழுத்த பாதிப்­பு­க­ளு­ட­ன் இருந்­த­னர். உயிர் பாது­காப்புக் கரு­வி­களும் அவர்­க­ளுக்­குத் தேைவப்­பட்­டன," என்று கூறி­னார்.

இதனை தீனா­நாத் மங்­கேஷ்­கர் மருத்­து­வ­ம­னை­யின் மருத்­து­வர் டாக்­டர் பாரத் புரந்­தரே உறு­திப்­ப­டுத்­தி­னார்.

"எச்3என்2 தொற்று மட்­டு­மல்ல, கொவிட்-19, எச்1என்1 நோயா­ளி­களும் அதி­க­ரித்து வரு­கின்­ற­னர். சுவா­சக் கோளா­று­பாதிப்பும் அதி­க­ரித்து வரு­கிறது," என்­று அவர் தெரிவித்தார்.