புதுடெல்லி: அமெரிக்கா இவ்வாண்டு ஒரு மில்லியன் இந்தியர்களுக்கு விசாக்களை வழங்க உள்ளது. இந்த இலக்கை அடைய தூதரகம் கூடுதல் பணியாளர்களைச் சேர்த்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள அமெரிக்கத் தூதரக அலுவலகங்கள் இனி சனிக்கிழமைகளிலும் திறந்திருக்கும் என்றும் விசா நடைமுறை துரிதப்படுத்தப்படும் என்றும் அண்மையில் மும்பையில் உள்ள அமெரிக்க தூதரகத் தலைவர் ஜான் பல்லார்ட் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், அமெரிக்கத் தூதரகத்தின் செய்தித்தொடர்பாளர் டெல்லியில் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஊடகத்திடம் பேசியபோது, "இந்தியாவில் உள்ள எங்கள் தூதரகத்திலும் துணைத் தூதரகங்களிலும் ஏற்கெனவே இரண்டு லட்சத்திற்கும் அதிகமான விண்ணப்பங்களை அமெரிக்கத் தூதரகம் பரிசீலித்து உள்ளது. ஒரு மில்லியன் விசா விண்ணப்பங்களைச் செயல்படுத்துவதே எங்கள் இலக்கு," என்று தெரிவித்துள்ளார்.

