இருமல் மருந்து மோசடி கும்பல் கைது

இருமல் மருந்து மோசடி கும்பல் கைது

1 mins read
eac91f37-4b16-4d0c-9a75-33e9789c0dab
-

பொலாங்கிர்: ஒடிசா மாநிலக் காவல்துறையினர் நடத்திய அதிரடி சோதனையில், மிகப்பெரிய இருமல் மருந்து மோசடிக் கும்பல் சிக்கியுள்ளது. இந்த மோசடி தொடர்பில் 35 சந்தேகப் பேர்வழிகளைக் காவலர்கள் கைது செய்துள்ளனர்.

கைதானவர்களிடம் இருந்து ரூ.35 லட்சம் மதிப்புள்ள எஸ்காஃப் என்ற இருமல் மருந்துப் புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இருமல் மருந்து மோசடியில் சம்பந்தப்பட்ட முக்கிய குற்றவாளிகள் இருவர் கண்டறியப்பட்டு, அவர்களைக் காவல்துறையினர் தொடர்ச்சியாக பின்தொடர்ந்ததில், மிகப்பெரிய இருமல் மருந்து மோசடிக் கும்பல் சிக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. உள்ளூர் மக்கள் அளித்த தகவல், தகவல் தொழில்நுட்பம் வழி கிடைத்த தகவல்கள், பல்வேறு ரகசிய தகவல்கள் வழி குற்றவாளிகளைக் கைது செய்துள்ளதாகக் காவலர்கள் கூறினர்.