கோமதி நதியைக் காப்பதற்காக 690 கி.மீ. 'தண்ணீர்ப் பெண்' நடைப்பயணம்

கோமதி நதியைக் காப்பதற்காக 690 கி.மீ. 'தண்ணீர்ப் பெண்' நடைப்பயணம்

1 mins read
e975e157-0708-4506-9bab-048477c2843f
-

லக்னோ: உத்­த­ரப்பிர­தேச மாநி­லத்­தில் ஷிப்ரா பதக் என்ற பெண் ஆர்­வ­லர் வசித்து வரு­கி­றார். இவரை 'தண்­ணீர்ப் பெண்' என்றே பல­ரும் அழைக்கின்­ற­னர். ஏனெ­னில், இவர் மாச­டைந்து வரும் கோமதி நதி­யைக் காக்­கும் வகை­யில், மக்­க­ளி­டையே விழிப்­பு­ணர்வை ஏற்­படுத்த 690 கிலோ மீட்­டர் தூர நடைப் பயணத்தை மேற்­கொண்­டுள்­ளார்.

உத்­த­ரப்­பி­ர­தே­சத்­தில் கங்­கை­யின் கிளை நதி­யான கோமதி ஆறு 690 கி.மீ. தூரம் வரை பாய்­கிறது. ஆக்­கி­ர­மிப்­பு­களும் கழி­வு­களும் சேர்­வ­தால் ஆறு மாச­டைந்து வரு­கிறது. இந்­ந­தி­யைக் காக்­கும் நோக்­கத்­தில் அவர் தன் நடைப்பயணத்தைத் தொடங்­கி­யுள்­ளார்.

இது­பற்றி ஷிப்ரா கூறு­கை­யில், "நதிக்­க­ரை­யோ­ரம் வசிக்­கும் மக்­கள் நதி­யைப் பற்றி மிக­வும் கவ­லைப்­ப­டு­கி­றார்­கள். இதற்கு என்ன செய்­வது என்று அவர்­க­ளுக்­குத் தெரி­ய­வில்லை. நான் இந்த யாத்­தி­ரை மூலம் நதியைப் பாது­காப்­ப­தற்­கான நட­வ­டிக்­கை­களை எடுக்க அவர்­களை ஊக்­கப்­ப­டுத்தி வரு­கி­றேன். இதனால் நல்­லது நடக்­கும் என நம்­பு­கி­றேன். எனக்கு ஆத­ர­வாக பலரும் பாத­யாத்­தி­ரை­யில் இணைந்­துள்­ள­னர்," என்று தெரிவித்தார். மாச­டைந்து வரும் நதி­யைப் பாது­காக்க 690 கி.மீ. தூரம் நடப்­ப­தற்கு ஷிப்ரா பதக் எடுத்­துள்ள துணிச்­ச­லான முயற்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர்.