தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

உலகின் பெரிய ஆயுத இறக்குமதியாளராக இந்தியா

1 mins read
c8555160-afb1-40c2-9db2-a1c6ed839bd8
-

புது­டெல்லி: உலக அளவில் ஆயுத இறக்குமதியில் இந்தியா தொடர்ந்து முதலிடத்தில் நீடித்து வருவதாக சுவீடன் நிறுவனம் தெரிவித்துள்ளது.

உலகில் அதிகளவில் ஆயுதம் இறக்குமதி செய்யும் நாடுகளின் பட்டியலை சுவீடன் தலைநகர் ஸ்டாக்கோமை மையமாகக் கொண்டு இயங்கும் 'சிப்ரி' என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 2018-22 காலகட்டத்தில் ஆயுத இறக்குமதி செய்த நாடுகளின் பட்டியலில் இந்தியா முதலிடத்திலும் சவூதி அரேபியா, கத்தார், ஆஸ்திரேலியா, சீனா போன்ற நாடுகள் அடுத் தடுத்த இடங்களிலும் இருப்பதாக அந்நிறுவனம் கூறியுள்ளது.

கடந்த 2013-17 மற்றும் 2018-22ஆம் ஆண்டுகளுக்கு இடைப் பட்ட காலகட்டத்தில் இந்தியாவின் ஆயுத இறக்குமதி 11 விழுக் காடாகக் குறைந்திருந்தபோதி லும் இப்பட்டியலில் இந்தியா முதலிடத்தில் நீடிப்பதாகவும் அந் நிறுவனம் கூறியுள்ளது.

அண்மைய புள்ளிவிவ­ரங்­களில் ரஷ்யா இந்­தி­யா­விற்கு ஆக அதிகமாக ஆயு­தங்­கள் வழங்­கு­ப­வ­ராக உள்­ளதாகத் தெரிகிறது.

2018-2022 கால­கட்­டங்­களில் மொத்த இறக்­கு­ம­தி­யில் அதன் பங்கு 45%ஆக இருந்துள்ளது.

ஆயுத இறக்­கு­ம­தி­யில் இந்­தி­யா­வைத் தொடர்ந்து சவூதி அரே­பியா (9.6%), கத்­தார் (6.4%), ஆஸ்­தி­ரே­லியா (4.7%), சீனா (4.6%), பாகிஸ்­தான் (3.7%) ஆகிய நாடு­கள் உள்­ளன. அமெ­ரிக்கா, சீனா­விற்கு அடுத்­த­ப­டி­யாக உல­கின் மூன்­றா­வது பெரிய ரா­ணு­வத்துக்குச் செலவு செய்­யும் நாடாக இந்­தியா தொடர் நட­வடிக்­கை­யை எடுத்து வரு­கிறது.