'வந்தே பாரத்' ரயிலை ஓட்டிய ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்

'வந்தே பாரத்' ரயிலை ஓட்டிய ஆசியாவின் முதல் பெண் ஓட்டுநர்

1 mins read
73bdd1b3-780d-45fe-aeee-d16951151ccf
-

மும்பை: பெண்­கள் தற்­போது அனைத்­துத் துறை­க­ளி­லும் முன்­னேறி வரும் நிலை­யில், 'வந்தே பாரத்' விரைவு ரயிலை இயக்­கிய முதல் பெண் என்ற பெரு­மையை சுரேகா யாதவ் பெற்­றுள்­ளார்.

மகா­ராஷ்­டி­ரா மாநிலம், சோலாப்­பூ­ரில் இருந்து மும்­பை­யின் சத்­தி­ர­பதி சிவாஜி மகா­ராஜா முனை­யம் வரை 'வந்தே பாரத்' ரயிலை இயக்கி சாதனை படைத்­துள்ள சுரேகாவின் புகைப்­ ப­டத்தைப் பகிர்ந்து ரயில்வே துறை அமைச்­சர் அஸ்­வினி வைஷ்­ணவ் பாராட்டியுள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட் டர் பக்­கத்­தில், 'வந்தே பாரத்' பெண் சக்­தி­யால் இயக்­கப்­படு­கிறது. 'வந்தே பாரத்' ரயிலின் முதல் பெண் ஓட்டுநர் சுரேகா யாதவ்," எனப் பதி­விட்­டுள்­ளார்.

விரை­வில் 400 'வந்தே பாரத்' ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக வும் அமைச்சர் அஸ்­வினி வைஷ்­ணவ் கூறி­யுள்­ளார்.

மகா­ராஷ்­டிரா மாநி­லம், சதாரா பகு­தி­யைச் சேர்ந்­த­வர் சுரேகா யாதவ், 55. இவர், கடந்த 1988ல் நாட்­டின் முதல் பெண் ரயில் ஓட்டு­ந­ரா­கப் பணி­யில் சேர்ந்து இப்­போது `வந்தே பாரத்' ரயிலை யும் இயக்கியுள்ளார்.