சளிக்காய்ச்சல் பாதிப்பு: புதுச்சேரி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 10 நாள்கள் விடுமுறை

சளிக்காய்ச்சல் பாதிப்பு: புதுச்சேரி தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு 10 நாள்கள் விடுமுறை

2 mins read
82c90a4d-6b23-45b5-af05-7010e238b95b
புதுச்­சேரி: இந்­தி­யா­வில் எச்3என்2 என்­னும் புது­வகை சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை வெகு­வாக உயர்ந்து வரு­கிறது. படம்: இணையம் -

புதுச்­சேரி: இந்­தி­யா­வில் எச்3என்2 என்­னும் புது­வகை சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­ப­டு­வோ­ரின் எண்­ணிக்கை வெகு­வாக உயர்ந்து வரு­கிறது.

புதுச்­சேரி, காரைக்­கா­லில் ஹெச்3என்2 என்­ற­ழைக்­கப்­படும் புது­வ­கை சளிக்­காய்ச்­சல் நோய் பரவி வரு­கிறது.

அத­னை­ய­டுத்து அங்கு தொடக்­கப்­பள்­ளி­க­ளுக்கு 10 நாள்க­ளுக்கு விடு­முறை அளிக்­கப்­பட்­டுள்ளதாக புதுச்­சேரி அரசு அறி­வித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் ஹெச்3என்2 சளிக்­காய்ச்­சல் பாதிப்பு அதி­க­ரித்து வரு­கிறது. இந்தப் புதிய வகை வைரஸ் 15 வய­துக்கு உட்­பட்ட குழந்­தை­கள் மற்­றும் முதி­யோ­ரைத் தான் அதி­கம் தாக்­கும் என்று கூறப்­ப­டு­கிறது.

குறிப்­பாக குழந்­தை­கள் அதிக அள­வில் பாதிக்­கப்­ப­டு­வ­தால் பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விட­வேண்­டும் என்று பேர­வை­யில் கோரிக்கை விடப்­பட்­டி­ருந்­தது.

இந்­நி­லை­யில் புதுச்­சேரி சட்­டப்­பே­ர­வை­யில் கல்­வி­ய­மைச்­சர் நமச்­சி­வா­யம் நேற்று (மார்ச் 15) சிறார்­கள் பயி­லும் பள்­ளி­க­ளுக்கு விடு­முறை விடப்­ப­டு­வ­தாக அறி­வித்­தார்.

அந்த அறிக்­கை­யில், "புதுச்­சே­ரி­யில் வைரஸ் தொற்று பரவி குழந்­தை­கள் பாதிக்­கப்­ப­டு­கின்­ற­னர்.

புதுச்­சேரி, காரைக்­கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு வட்­டா­ரங்­களில் 8ஆம் வகுப்பு வரையிலான அரசு, அரசு உதவி பெறும் மற்­றும் தனி­யார் பள்­ளி­கள் வரும் 16 முதல் 26 வரை விடு­முறை விடப்­ப­டு­கிறது,'' என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

இது குறித்து சுகா­தா­ரத்­துறை, "புதுச்­சேரி­யில், அனைத்து மருத்­து­வ­ம­னை­க­ளி­லும் காய்ச்­ச­லுக்கு என்று சிறப்­புப் புற­நோய் சிகிச்சைப் பிரிவு செயல்­பட்டு வரு­கிறது," என்று கூறியுள்ளது.

இந்­நி­லை­யில், 2023 ஜன­வ­ரி­மாதம் முதல் எடுக்­கப்­பட்ட 2,529 மாதி­ரி­களில் ஏறக்­கு­றைய 17 விழுக்காடு அதா­வது 428 மாதி­ரி­கள் 'எச்3என்2 வைரஸ்' காய்ச்­ச­லால் பாதிக்­கப்­பட்ட நோயா­ளி­கள் என தேசிய வைர­லாஜி இன்ஸ்­டி­டி­யூட் (என்­ஐவி) தெரி­வித்­துள்­ளது.

குறிப்­பாக ஐந்து வய­துக்கு குறை­வான குழந்­தை­க­ளி­டம் இவ்­வகை சளிக்­காய்ச்­சல் மிக வேக­மாக பரவி வரு­கிறது. இதை­யடுத்து, இந்த வயதுப் பிரி­வில் உள்ள குழந்­தை­கள்­தான் அவ­சர சிகிச்சைப் பிரி­வில் (ஐசியு) அதிக அள­வில் சேர்க்­கப்­பட்டு சிகிச்சை பெற்று வரு­கின்­ற­னர்.

இது­கு­றித்து என்­ஐவி விஞ்­ஞானி வர்ஷா பொட்­தர் கூறு­கை­யில், "புனே மாவட்­டத்­தில் புது­வகை சளிக்­காய்ச்­ச­லால் பாதிக்­கப்­படும் நோயா­ளி­க­ளுக்குக் கடு­மை­யான சுவா­சப் பிரச்­சினை காணப்­ப­டு­கிறது," என்­றார்.