'ராகுல் மன்னிப்பு கேட்க மாட்டார்'

'ராகுல் மன்னிப்பு கேட்க மாட்டார்'

1 mins read
2edf8bd9-e05a-4a2a-9df2-b46991b8e364
ராகுல்­காந்தி மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் அவர்கள் அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர். படம்: ஏஎஃப்பி -

புது­டெல்லி: இந்­திய ஜன­நா­ய­கம் சீர்­கு­லைந்து வரு­வ­தாக ராகுல் காந்தி லண்­ட­னில் பேசி இருந்­தார். அவ­ரது இந்தக் கருத்­துக்கு பாரதிய ஜனதா கட்சி கடும் எதிர்ப்பு தெரி­வித்­தது. ராகுல்­காந்தி மன்­னிப்பு கேட்க வேண்­டும் என்று வலி­யு­றுத்தி நாடா­ளு­மன்­றத்­தில் அவர்கள் அம­ளி­யில் ஈடு­பட்­ட­னர்.

இந்த நிலை­யில், ராகுல் காந்தி ஒருபோதும் மன்­னிப்பு கேட்க மாட்டார் என்று காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜுன கார்கே தெரி­வித்­துள்­ளார். நேற்று செய்­தி­யா­ளர்­க­ளைச் சந்­தித்­துப் பேசிய கார்கே, மோடி வெளி­நாடு­க­ளுக்­குச் சென்று நாட்டு மக்களை அவ­மா­னப்­ப­டுத்தி இருக்கி­றார் அதற்கு அவர் மன்­னிப்­புக் கேட்­டது இல்லை. ஜன­நா­ய­கம் குறித்து பேசி­யது தொடர்­பாக ராகுல் காந்தி மன்­னிப்­புக் கேட்­கும் கேள்­விக்கே இட­மில்லை என்று கூறி­யுள்­ளார்.