தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'உளவுபார்க்க வந்த புறா' மீனவர்களிடம் சிக்கியது

1 mins read
6d73b129-6c25-4b0a-b061-fb3f2e092d8c
-

புவ­னேஸ்­வர்: உள­வுச் சாத­னங்­கள் மற்­றும் கேம­ரா­வு­டன் வந்த புறா ஒன்று ஒடிசா மாநில மீன­வர்­க­ளி­டம் சிக்­கி­யது. இந்­தப் புறா உளவு பார்க்க அனுப்­பப்­பட்­டதா என காவல்­து­றை­யி­னர் விசா­ர­ணை­யைத் தொடங்­கி­யுள்­ள­னர்.

ஒடிசா மாநி­லத்­தின் பார­தீப் துறை­முகம் அருகே 40 கடல் மைல் தொலை­வில் அண்­மை­யில் அந்த மாநில மீன­வர்­கள் தங்­க­ளது சாரதி என்ற பட­கில் மீன்­பி­டித்­துக் கொண்­டி­ருந்­த­னர்.

அப்­போது தங்­க­ளது பட­கில் ஒரு வெள்ளை நிறப் புறா வந்து அமர்ந்­ததை மீன­வர்­கள் பார்த்­த­னர். அந்த புறா­வைப் பிடித்து பார்த்தபோது அதன் கால்களில் புகைப்படக்கருவி, மைக்­ரோ­சிப் போன்ற உளவுச் சாத­னங்­கள் பொருத்­தப்­பட்டு இருப்­பது தெரிய­வந்­தது.

கேமரா தெரி­யா­த­வ­கை­யில் அதன் மீது கறுப்புப் பசை நாடாவால் ஒட்­டப்­பட்டு இருந்­தது. மேலும், புறா­வின் இறக்­கை­களில் வெளி­நாட்டு மொழி­களில் ஏதோ எழு­தி­யி­ருந்­தது. இதை­ய­டுத்து அந்­தப் புறாவை காவல்­து­றை­யி­டம் மீன­வர்­கள் ஒப்­ப­டைத்­த­னர்.

இந்த புறா ஒடிசா கடற்­க­ரை­யில் உளவு பார்க்க அனுப்­பப்­பட்டு இருக்­க­லாம் என்று கூறப்படுகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.