புதுடெல்லி: இந்திய மருத்துவர்களின் திறமை, கண்டுபிடிப்புகளைப் பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். மத்திய சுகாதாரம், குடும்ப நலத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் டுவிட்டை பகிர்ந்து கொண்டுள்ள பிரதமர் மோடி, கருவின் சிறிய அளவு இதய அடைப்பை 90 வினாடிகளில் வெற்றி கரமாக இந்திய மருத்துவர்கள் சரிப்படுத்தி சாதனை செய்துள்ளதாகக் கூறியுள்ளார்.
இந்திய மருத்துவர்களின் திறமை, கண்டுபிடிப்புகளுக்காக பெருமைப்படுவதாகவும் பிரதமர் மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

