கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

கருவில் உள்ள குழந்தைக்கு இதய அறுவை சிகிச்சை

1 mins read
3d4ed7ea-514f-4d3d-9778-50e4c01d0b08
-

புது­டெல்லி: கரு­வில் இருந்த குழந்­தைக்கு ஒன்­றரை நிமிட நேரத்­தில் இதய அறுவை சிகிச்சை செய்து மருத்­து­வர்­கள் சாதனை படைத்­துள்­ள­னர்.

டெல்­லி­ எய்ம்ஸ் மருத்­து­வ­மனை­யில் ஏற்ெகனவே மூன்று முறை கரு கலைந்­தி­ருந்த நிலை­யில், நான்­கா­வது முறை­யாக 28 வயது கர்ப்­பி­ணிப் பெண் ஒரு­வர் சிகிச்­சைக்­காக அனுமதிக்­கப்­பட்­டி­ருந்­தார்.

அவ­ருக்கு நடத்­தப்­பட்ட பரி­சோ­த­னை­யில், கரு­வில் உள்ள குழந்­தைக்கு இத­யத்­தில் அடைப்பு இருப்­பது கண்­ட­றி­யப்­பட்­டது.

இது­கு­றித்து பெற்­றோ­ருக்குத் தெரியவர, குழந்­தைக்கு சிகிச்சை அளிக்க சம்­ம­தம் தெரி­வித்­த­னர்.

இதை­ய­டுத்து, கரு­வி­லேயே குழந்­தைக்குச் சிகிச்சையளிக்க மருத்­து­வர்­கள் முடிவெடுத்­த­னர்.

'அல்ட்­ரா­ச­வுண்ட் ஸ்கேன்' வழி­காட்­டு­த­லின்­கீழ் தாயின் அடி­வ­யிற்­றில் துளை­யிட்டு கரு­வில் உள்ள குழந்­தை­யின் இத­யத்­துக்கு மெல்­லிய குழாய் மூலம் சிறிய பலூ­னைக் கொண்டுசென்­ற­னர். பின்­னர், திராட்சை அளவே இருந்த குழந்­தை­யின் இத­யத்­தில் இருந்த அடைப்பை நீக்­கி­னர்.

இந்த சிகிச்சை 90 வினா­டி­களில் செய்து முடிக்­கப்­பட்­டது.

இது­கு­றித்து அறுவை சிகிச்சை செய்த மூத்த மருத்­து­வர் ஒரு­வர் கூறும்­போது, "தாயின் அடிவயிற்­றின் வழி­யாக கரு­வில் உள்ள குழந்­தைக்கு இத­யத்­தில் ஓர் ஊசி யைச் செலுத்தி அடைப்பைச் சரி­செய்­தோம். குழந்­தை­யின் இத­யம் நன்­றாக வள­ரும் என எதிர்­பார்க்­கி­றோம். குழந்தை பிறக்கும்போது இதய நோய் தீவிரம் குறைவாக இருக்கும். இதுபோன்ற சிகிச்சை முறை மிகவும் சவாலானது," என்றார்.