மும்பை: மும்பையில் பிளாஸ்டிக் பையில் சிதைந்த நிலையில் இருந்த ஒரு தாயின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இவர் கடந்த டிசம்பர் மாதத்தில் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என சந்தேகிப்பதாக காவலர்கள் தெரிவித்துள்ளனர்.
மும்பையில் உள்ள லால்பாக் பகுதியைச் சேர்ந்தவர் வீனா, 52. இவரது மகள் ரிபுல் ஜெயின், 24.
சம்பவத்தன்று வீனாவின் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்துள்ளார். வீடு உள்பக்கமாக பூட்டப்பட்டு இருந்ததால் வெகு நேரம் தட்டியும் கதவு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அவர் அங்குள்ள காலாசவுக்கி காவலர்களுக்குத் தகவல் கூறினார்.
இதையடுத்து, அங்கு வந்த காவலர்கள் வீட்டுக்குள் மௌன மாக இருந்த ரிபுல் ஜெயினிடம் தாய் கொலை தொடர்பில் விசா ரித்து அவரைக் கைது செய்தனர்.
"கொலை செய்யப்பட்ட பின்னர் பெண்ணின் கைகள், கால்கள் துண்டிக்கப்பட்டுள்ளன.
"வீட்டில் இருந்து மீட்கப்பட்ட மின்சார மார்பிள் கட்டர், அரிவாள், சிறிய கத்தியைப் பயன்படுத்தி தாய் வீனா கொலை செய்யப்பட்டுள்ளார்," என்று காவல் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
வீட்டில் உள்ள அலமாரி, பாத்திரங்கள், தண்ணீர் தொட்டியில் இருந்து தாயார் வீனாவின் உடல் பாகங்களை காவல்துறையினர் மீட்டுள்ளனர்.
இந்த உடல் பாகங்களின் மாதிரிகளை ஆய்வகப் பரிசோத னைக்காக அனுப்பிவைத்தனர்.
முதற்கட்ட விசாரணையில், தான் நன்கு படித்துள்ளதாகவும் தனது தாயார் தவறி விழுந்து இறந்துவிட்டதாகவும் ரிபுல் கூறியதாகக் கூறப்படுகிறது. விசாரணை தொடர்கிறது.

