திருமலை: அரசுத் தேர்வுக்கான வினாத்தாள் கசிந்த விவகாரம் ெதாடர்பாக ஆசிரியை உள்பட 9 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த வாரம் நடந்த அரசு தேர்வை மாநில தேர்வாணையம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.
வினாத்தாள் மோசடியில் பல லட்சங்கள் கைமாறி உள்ளதாகவும் கூறப்படு கிறது. இம்மோசடியில் ஈடுபட்ட இளநிலை உதவியாளர் பிரவீன்குமார், தேர்வாணைய தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்த ராஜசேகர், அரசுப் பள்ளி ஆசிரியை ரேணுகா, இவரது கணவர், அண்ணன்கள் உள்ளிட்ட ஒன்பது பேர் கைது செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.

