ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; தேடப்படும் இரு விமானிகள்

ராணுவ ஹெலிகாப்டர் விபத்து; தேடப்படும் இரு விமானிகள்

1 mins read
a9775e99-ad9c-4a2a-a12a-1f2012179d97
-

இட்­டா­ந­கர்: அரு­ணாச்­ச­லப் பிர­தே­சத்­தில் உள்ள மண்­டலா மலைப் பகு­தி­யில் இந்­திய ராணு­வத்­தின் 'சீட்டா' ரக ஹெலி­காப்­டர் நேற்று காலை (வியா­ழன்) விழுந்து நொறுங்­கி­ய­தாக பிடிஐ ஊட­கத் தக­வல் குறிப்­பிட்டிருந்­தது.

ஹெலி­காப்­டரை இயக்­கிய விமானி, துணை விமானி இரு வரை­யும் தேடும் பணி­யும் தீவி­ர­மாக தொடர்ந்­தது.

"மண்­ட­லா­வுக்கு மேற்­குப் பகு­தி­யில் உள்ள போம்­டிலா அருகே பயிற்­சி­யில் ஈடு­பட்­டுக்­கொண்­டி­ருந்த ஹெலி­காப்­டர், நேற்று காலை 9.15 மணி­ய­ள­வில் விமா­னப் போக்­கு­வ­ரத்­துக் கட்­டுப்­பாட்டு மையத்­து­ட­னான (ஏடிசி) தொடர்பை இழந்­தது.

"சம்­பவ இடத்­திற்குத் தேடு­தல் குழு­வி­னர் அனுப்­பப்­பட்­டுள்­ள­னர்," என்று கௌகாத்தி, பாது காப்­புத்­து­றை­யின் செய்­தித்­தொடர்­பா­ளர் லெப்­டி­னன்ட் கர்­னல் மகேந்­திர ராவத் கூறி­னார்.

முதற்­கட்­டத் தக­வ­லின்­படி, கடும் பனி­மூட்­டம் கார­ண­மாக ஹெலி­காப்­டர் விபத்­துக்­குள்­ளா­ன­தாகத் தெரியவந்துள்ளது.

கடந்தாண்டு அக்டோபரில் அருணாச்சலப் பிரதேசத்தின் மிக்கிங்கில் இந்திய ராணுவத்தின் ஏஎல்ஹெச் ஹெலிகாப்டர் விபத் துக்குள்ளானது. இதில் இரு விமானிகள் உட்பட ஐந்து பணி யாளர்கள் உயிரிழந்தனர்.