17 கோரிக்கைகளை வலியுறுத்தி 200 கி.மீ. தூரம் ஆயிரக்கணக்கானோர் நடைப்பயணம் வெங்காய விலை வீழ்ச்சியை எதிர்த்து விவசாயிகள் பேரணி

2 mins read
e64f48dc-93da-4528-b64c-a7a54abbcf5f
-

தானே: மகா­ராஷ்­டி­ரா­வில் வெங்­கா­யத்­தின் விலை 2 ரூபாயாக வீழ்ச்சி அடைந்­துள்­ளது. இதனால், வேதனையில் உள்ள ஆயி­ரக் கணக்­கான விவ­சா­யி­கள் தங்க ளது வாழ்வாதாரத்தைக் காக்க இரண்­டாம் நாளாக நேற்று பேரணி­யைத் தொடர்ந்­த­னர்.

வெங்காய விவசாயிகளுக்குக் கூடு­தல் மானி­யம், 12 மணி நேர தடையில்லா மின்சாரம், விவ சாயக் கடன்கள் தள்ளுபடி உள் ளிட்ட 17 கோரிக்­கை­களை நிறை வேற்றித் தரும்படி அவர்கள் அர சுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

வடக்கு மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் மாவட்டத்தில் இருந்து பேரணியாகச் செல்லும் விவசாயி களும் பழங்குடியினரும் வரும் 20ஆம் தேதி­ மும்பை நகரை அடைவார்கள் என எதிர் பார்க்கப்படுகிறது.

செல்லும் வழி­களில் சமைத்­துச் சாப்­பிட்டு, இர­வில் சாலை­களில் தங்கி, பக­லில் மும்­பையை நோக்கி முன்­னேறி வருகின்றனர்.

ஆசி­யா­வின் மிகப்­பெ­ரிய மொத்த விற்பனைச் சந்­தை­யான நாசிக்­கில் ஒரு கிலோ வெங்­கா­யம் ரூ.2க்கு விற்கப்படுவதால், வெங்­கா­யத்தை நெருப்­பில் கொட்டி விவசாயிகள் தங்­க­ளது எதிர்ப்பைக் காட்டினர்.

குவிண்­டால் ஒன்­றுக்கு ரூ.2,000 என விலையை நிர்­ண­யிக்­கும்­படி வலி­யு­றுத்தி உள்ள அவர்­கள், குவிண்­டா­லுக்கு ரூ.300 மானி­யம் தருவதாக மகா­ராஷ்­டிர முதல்­வர் ஏக்­நாத் ஷிண்டே கூறியதற்கு வேண்டாம் என மறுத்துவிட்டனர்.

விவசாயிகளின் 200 கிலோ மீட்­டர் தூரப் பேரணி, நேற்று தானே மாவட்­டத்தை அடைந்த நிலை­யில், பெண்­களுக்கு அடிப்­படை வச­தி­கள் செய்து தரப்பட­வில்லை என்ற குற்­றச்­சாட்டும் கூறப்பட்டது.

மகா­ராஷ்­டிர அர­சுக்கு விவ­சா­யி­க­ளின் போராட்­டம் பெரும் தலைவலியை ஏற்­ப­டுத்தி உள்ள நிலை­யில், வெங்­கா­யத்தைக் கொள்­மு­தல் செய்ய ஒரு சில நிறு­வ­னங்­க­ளுக்கு மத்­திய அரசு உத்­த­ர­விட்­டுள்­ளது.

எனி­னும், "இது காலம் கடந்த நட­வ­டிக்கை," என்று விவ­சா­யி­கள் கூறி­யுள்­ள­னர்.

இதனிடையே, விவ­சா­யிகளின் போராட்­டத்தை முடி­வுக்குக் கொண்­டு­வர அவர்­க­ளு­டன் நேற்று மாலை பேச்­சு­வார்த்தை நடத்த முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் ஆகியோர் முன்­வந்­துள்­ளதாக தகவல்கள் கூறின.