தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தைக் குறைக்க கேரள அரசு மீண்டும் மனு

1 mins read
6f893b78-243a-4ba3-a3d9-b6b338e7eba7
-

புது­டெல்லி: முல்லைப் பெரி­யாறு அணை­யின் நீர்­மட்­டத்­தைக் குறைக்க வேண்­டும் என்று கோரி கேரள அரசு மீண்­டும் மனு தாக்­கல் செய்­துள்­ளது.

தமி­ழ­கத்­தின் தென்­மா­வட்ட மக்­க­ளின் நீர் ஆதா­ர­மாக இருப்­பது முல்லைப் பெரி­யாறு அணை.

இந்த அணை­யில் 154 அடி வரை தண்­ணீ­ரைத் தேக்கி வைக்க முடி­யும். ஆனால் இதற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரி­வித்து வருகிறது. இத­னால் முல்லைப் பெரி­யாறு அணை­யில் நீர் தேக்­கு­ வது குறித்து உச்ச நீதி­மன்­றத்­தில் விசா­ரணை நடை­பெற்­றது.

இதில் முல்லைப் பெரி­யாறு அணை­யில் 142 அடி தண்­ணீர் தேக்­க­லாம் என உச்ச நீதி­மன்­றம் அனு­மதி வழங்­கி­யது.

இந்த நிலை­யில் முல்லைப் பெரி­யாறு அணை­யின் நீர் மட்­டத்தை 136 அடி­யாக குறைக்க வேண்­டும் என கேர­ளா­வைச் சேர்ந்த ஜோசப் என்­ப­வர் உச்ச நீதி­மன்றத்தில் வழக்கு தொடர்ந்­தார். இந்த வழக்­கில் கேரள அர­சும் மனு செய்­துள்­ளது.

அந்த மனு­வில் முல்லைப் பெரி­யாறு அணை­யின் பாது­காப்பை ஆய்வு செய்ய வேண்­டும் என தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

மேலும் கடந்த 2002ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் நவம்­பர் மாதம் வரை முல்லைப் பெரி­யாறு அணை பகு­தி­யில் 138 சிறிய நில அதிர்­வு­கள் ஏற்­பட்­ட­தாகக் கூறி­யது. எனவே நீரி­யல், கட்­டு­மா­னம், புவி­யி­யல் நில­ந­டுக்­கம் உள்­ளிட்ட அம்­சங்­கள் அடிப்­ப­டை­யில் அணை­யின் பாது­காப்பை மறு ஆய்வு செய்ய வேண்­டும் என்­றும் அந்த மனு­வில் குறிப்­பிடப்பட்­டுள்­ளது.