வணிக வளாக தீ விபத்தில் அறுவர் மரணம்

வணிக வளாக தீ விபத்தில் அறுவர் மரணம்

2 mins read
23e2f74c-90e0-455a-bede-3accf51f6b13
-

திருப்­பதி: தெலுங்­கானா மாநி­லத்­தில் செகந்­தி­ரா­பாத் ஆர்பி சாலை­யில் உள்ள வணிக வளா­கத்­தில் தீ மூண்­ட­தில் ஆறு ஊழி­யர்­கள் உயி­ரி­ழந்­த­னர்.

எட்டு மாடி வணிக வளா­கத்­தில் ஏரா­ள­மான தனி­யார் நிறு­வ­னங்­கள் இயங்கி வரு­கின்­றன.

5வது தளத்­தில் 'கால் சென்­டர்' இயங்கி வரு­கிறது. வியா­ழன் இரவு 8வது தளத்­தில் தீ மூண்­டது. அதி­வே­கத்­தில் தீ 7, 6, 5வது தளங்­க­ளுக்­கும் பர­வி­யது. இத­னால் வணிக வளா­கத்­தில் இருந்­த­வர்­கள் அலறி அடித்­துக் கொண்டு கீழே இறங்­கி­னர். சிலர் சன்­னல் வழி­யாக குதித்து உயிர் தப்பி­னர்.

ஒரு புறம் மழை பெய்து கொண்டு இருந்­தா­லும் தீ மள­ம­ள­வென எரிந்­தது. 5வது தளம் புகை மண்­ட­ல­மாக மாறி­யது.

இதை­ய­டுத்து கால் சென்­ட­ரில் வேலை செய்துகொண்­டி­ருந்­த­வர்­க­ளுக்கு மூச்­சுத் திண­றல் ஏற்­பட்டு அலு­வ­ல­கத்­தில் இருந்து வெளியே வர முடி­யா­மல் தவித்­த­னர்.

தக­வ­ல­றிந்து அங்கு வந்த தீய­ணைப்புத் துறை­யி­னர் நீண்ட நேரம் போராடி தீயைக் கட்­டுக்­குள் கொண்டு வந்­த­னர்.

கட்­டடங்­களில் இருந்த கண்­ணா­டி­கள் தீயில் வெடித்துச் சிதறி­ய­தால் ராட்­சத கிரேன் மூலம் கால் சென்­ட­ரில் சிக்­கி­­இருந்த 18 பேர் மீட்­கப்­பட்டு தனி­யார் மருத்­து­வ­ம­னை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். ஆனால் அவர்­களில் ஆறு பேர் சிகிச்சை பல­ன் அளிக் ­கா­மல் இறந்­த­னர். இறந்தவர்கள் அனைவரும் 20 முதல் 24 வயதுக்குட்பட்ட இளையர்கள் என நம்பப்படுகிறது.

உத்தரப்பிரதேசத்தில் நிகழ்ந்த மற்றொரு விபத்தில் எட்டுப் பேர் உயிரிழந்தனர். சம்பலின் சந் தெள பகுதியில் உருளைக் கிழங்கு குளிர்சாதனக் கிடங்கின் மேற்கூரை இடிந்தது. இதில் 11 பேர் காயமடைந்தனர். காவல் துறையினர், மோப்ப நாய் உதவி யுடன் காணாமல் போனவர்களைத் தேடி வருகின்றனர்.