தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்திய மீனவர்களுக்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுங்கள்: இலங்கை

2 mins read
f13af00e-b818-4f44-ac0b-8920cc3a8eb9
-

கொழும்பு: இந்­திய மீன­வர்­கள் எல்­லை தாண்டி இலங்கை கடற்­ப­கு­திக்­குள் நுழைந்து மீன்­பி­டித்­தால் அவர்­க­ளுக்கு எதி­ராக கட­லி­லேயே ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டுங்­கள் என்று இலங்கை மீன­வர்­க­ளுக்கு அமைச்­சர் டக்ளஸ் தேவா­னந்தா அறி­வுரை வழங்­கி­யி­ருப்­ப­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

ராம­நா­த­பு­ரம், புதுக்­கோட்டை, நாகை உள்­ளிட்ட கட­லோர மாவட்­டங்­க­ளின் பகு­தி­களில் இருந்து ஆயி­ரக்­க­ணக்­கான மீன­வர்­கள் மீன்­பி­டித் தொழி­லில் ஈடு­பட்டு வரு­கின்­ற­னர். மீன்­பிடித் தொழி­லில் பல்­வேறு சிர­மங்­களை தமிழ்­நாட்டு மீன­வர்­கள் அனு­ப­வித்து வரு­கின்­ற­னர். எல்லை தாண்டி மீன்­பி­டித்­த­தாக தமிழ்­நாட்டு மீன­வர்­கள் இலங்கை கடற்­ப­டை­யி­ன­ரால் கைது செய்­யப்­படும் நிகழ்­வு­கள் தொடர் கதை­யா­கவே நடை­பெற்று வரு­கிறது.

இந்­தி­யா­வுக்­குச் சொந்­த­மான தமிழ்­நாட்­டை­ ஒட்­டி­யி­ருந்த கச்­சத் தீவை இந்­தியா அப்­ப­டியே இலங்­கைக்­குத் தாரை வார்த்­த­தி­ல்­இருந்து இந்­தப் பிரச்­சினை நீடித்து வரு­கிறது. தமி­ழக மீன­வர்­கள் இலங்­கை­யில் உள்ள சிறை­களில் அடைக்­கப்­ப­டு­வ­தும், அவர்­க­ளது பட­கு­கள் பறி­மு­தல் செய்­யப்படுவ­தும் தொடர்ந்து நடை­பெ­று­கிறது. மீன்­பி­டிப்­ப­தையை தங்­க­ளது வாழ்­வா­தா­ர­மாகக் கொண்­டுள்ள தமி­ழக மீன­வர்­கள் இத்­த­கைய தொடர் நட­வ­டிக்­கை­யால் பாதிக்­கப்­பட்டு வரு­கின்­ற­னர்.

இந்த நிலை­யில் இந்­திய மீன­வர்­க­ளுக்கு எதி­ராக கட­லில் ஆர்ப்­பாட்­டத்­தில் ஈடு­ப­டு­மாறு இலங்கை மீன­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தல் வழங்­கி­யுள்­ள­தாக இலங்­கை­யின் மீன்­வ­ளத்­துறை அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார். கிளி­நொச்­சி­யில் இடம்­பெற்ற நிகழ்ச்­சி­யில் பங்­கேற்ற பிறகு செய்­தி­யா­ளர்­க­ளி­டம் இத்­த­க­வலை அவர் தெரி­வித்­தார்.

"எல்­லை ­தா­ண­டும் இந்­திய மீன­வர்­களை இலங்கை படை­யி­னர் கைது செய்து சட்ட நட­வ­டிக்கை எடுக்­கும்­பொ­ழுது அது வேறு­வி­த­மாக பார்க்­கப்­ப­டு­கிறது. இந்த நிலை­யில், எல்லை தாண்­டும் இந்­திய மீன­வர்­களைக் கண்­டித்து எமது மீன­வர்­களை கட­லில் ஆர்ப்­பாட்­டம் செய்­யு­மாறு அறி­வுரை வழங்­கி­யி­ருக்­கி­றேன்," என அமைச்­சர் டக்­ளஸ் தேவா­னந்தா தெரி­வித்­துள்­ளார்.