தோண்டத் தோண்ட தங்கம்; ஆற்றங்கரையில் குவிந்த மக்கள்

கோல்­கத்தா: இந்­தி­யா­வின் 4வது பெரிய மாநி­ல­மாக விளங்­கும் மேற்கு வங்­கத்­தில் உள்ள பிர்­பூம் பகு­தி­யில் சிறிய தங்க நாண­யங்­கள் புதைந்து கிடப்­ப­தாக தக­வல் பர­வி­ய­தால் அங்கு ஏரா­ள­மான மக்­கள் குவிந்­த­னர்.

அங்குள்ள பார்­கண்டி கிரா­மத்­தில் பாய்­கிறது பான்ஸ்­லோய் ஆறு. இந்த ஆற்­றின் ஓரத்­தில் இரண்டு நாட்­க­ளுக்கு முன்பு தங்­கக் காசு­களை ஒரு­வர் கண்­டெ­டுத்­துள்­ளார். தொடர்ந்து தேடி­ய­போது, வேறு சில நாண­யங்­களும் அவர் கையில் கிடைத்துள்ளன.

இந்­நி­லை­யில், நதிக்­க­ரை­யில் தங்­கம் கிடைக்­கும் செய்தி காட்டுத்தீ போல் பரவ, பார்­கண்டி கிராம மக்­கள் ஆற்­றின் கரை­யோ­ரம் குவிந்­த­னர்.

சிலர் தங்­க­ளது கைக­ளா­லும் சிலர் மண்­வெட்­டி­க­ளா­லும் கடப்­பா­றை­க­ளா­லும் மண்­ணைத் தோண்டி தங்­கத்தை தேடி­னர்.

அப்­போது, சிறிய அள­வி­லான பழைய நாண­யங்­க­ள் கிடைத்­துள்­ளன. அதில் பழங்­கால எழுத்­து­களும் அடை­யா­ளங்­களும் இருந்துள்ளன. வர­லாற்­றில் அந்­தப் பகு­திக்கு அரு­கில் ‘மகேஷ்­பூர் ராஜ்­பரி’ என்ற நக­ரம் இருந்­ததாகவும் அது சுபர்­ண­ரேகா நதி­யில் மூழ்­கி­ய­தா­க­வும் நம்­பப்­ப­டு­கிறது. புதைந்த தங்­கம் சுபர்­ண­ரேகா நதி வழி­யாக பான்ஸ்­லோய் நதிக்கு வந்­தி­ருக்­க­லாம் என்­றும் ஒரு­சா­ரார் கூறு­கின்­ற­னர்.

இந்த இடத்தை மாவட்ட நிர்­வாகத்தின் கட்­டுப்­பாட்­டுக்­குள் கொண்­டு­வந்து ஆற்­றின் குறுக்கே காவலர்கள் பாது­காப்பு போடப்­பட்­டுள்­ளது. தொல்­லி­யல் துறை­யி­னரும் அங்கு வந்து ஆய்வு செய்ய உள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!