மத்தியில் காங்கிரஸ் அல்லாத புதிய கூட்டணி அமைக்க முடிவு

கோல்­கத்தா: அடுத்த ஆண்டு மக்­க­ள­வைத் தேர்­தல் நடை­பெற உள்ள நிலை­யில், மத்­தி­யில் ஆளும் பாஜ­க­வுக்கு எதி­ராக வலு­வான கூட்­ட­ணியை அமைத்து ஆட்­சி­யைக் கைப்­பற்ற எதிர்க்­கட்­சி­கள் வியூ­கம் வகுத்துள்ளன.

எதிர்­வ­ரும் தேர்­த­லில் ஆளும் பாஜ­கவை தோற்­க­டிக்க அனைத்து எதிர்க்­கட்­சி­யி­ன­ரை­யும் ஓர­ணி­யில் திரட்­டும் முயற்­சிக்கு காங்­கி­ரஸ் தலை­வர் மல்­லி­கார்­ஜூன கார்கே குரல் கொடுத்து வரு­கி­றார்.

எனி­னும், இவ்­வி­ஷ­யத்­தில் ஒரு­மித்த கருத்து ஏற்­ப­டா­மல் இழு­பறி நிலவு­கிறது.

அத்­து­டன், காங்­கி­ரஸ் அல்­லாத எதிர்க்­கட்­சி­யி­ன­ரின் கூட்­ட­ணியை அமைக்க முக்­கிய கட்­சி­கள் ஒப்­புக்­கொண்டுள்­ள­தாகத் தக­வல்­கள் தெரி­விக்­கின்­றன.

மேற்­கு­வங்க முதல்­வ­ரும் திரி­ணா­மூல் காங்­கி­ரஸ் தலை­வ­ரு­மான மம்தா பானர்­ஜி­யும் சமாஜ்­வாதி தலை­வர் அகி­லேஷ் யாத­வும் கோல்­கத்­தா­வில் சந்­தித்­துப் பேசி­யபோது, புதிய அணியை உரு­வாக்­கு­வது குறித்து முக்­கிய முடி­வு­கள் எடுக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

மம்தா பானர்ஜி வரும் 23ஆம் தேதி ஒடிசா முதல்­வ­ரும் பிஜு ஜனதா தள தலை­வ­ரு­மான நவீன் பட்­நா­யக்கை சந்­திக்க உள்­ளார்.

அத்­து­டன், டெல்லி முதல்­வரும் ஆம் ஆத்மி ஒருங்­கி­ணைப்­பாளருமான அரவிந்த் கெஜ்­ரி­வாலையும் தெலுங்­கானா மாநில முதல்­வ­ரும் பிஆர்­எஸ் கட்­சித் தலை­வ­ரு­மான சந்­தி­ர­சே­கர ராவையும் அடுத்தடுத்த வாரத்­தில் சந்­தித்­துப் பேச மம்தா தயாராகி வருகிறார். இவர்­கள் அனை­வ­ரும் சேர்ந்து காங்­கி­ரஸ் அல்­லாத அணியை உரு­வாக்க முடிவு செய்­துள்­ள­தா­க­வும் தக­வல் வெளி­யாகி உள்­ளது.

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!