இந்தியாவில் ஏழு மாநிலங்களில் அமையும் ஆடைகள் பூங்கா

அமைச்சர் பியூஸ் கோயல்: 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும்

புது­டெல்லி: உல­கின் மாபெ­ரும் துணி உற்­பத்தி மைய­மாக இந்தி யாவை உரு­வாக்க 70,000 கோடி ரூபாய் முத­லீட்­டில் ‘பி.எம்.மித்ரா’ ஆடை­கள் பூங்கா அமைக்­கப்­பட உள்­ளது. இதன்­வழி, 20 லட்­சம் பேருக்கு வேலை­வாய்ப்­பு­கள் உரு வாகும் என்று மத்­திய அமைச்­சர் பியூஸ் கோயல் தெரி­வித்­துள்­ளார்.

டெல்­லி­யில் செய்­தி­யா­ளர்களி­டம் பேசிய அவர், “தமி­ழ­கம், தெலுங்­கானா, கா்நாட­கம், மகா­ராஷ்­டி­ரம், குஜ­ராத், மத்­தி­யப் பிர­தே­சம், உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய ஏழு மாநி­லங்­க­ளி­லும் ‘ஒருங்­கி­ணைந்த ஜவுளி மண்­ட­லம், ஆடை­கள் பூங்கா’ (பி.எம். மித்ரா) திட்­டத்­தின்­கீழ்­ அமைக்­கப்­படும் எனப் பிர­த­மர் நரேந்­திர மோடி வெள்ளியன்று டுவிட்­ட­ரில் அறி­வித்திருந்­தார்.

“இந்தப் பூங்காக்கள் ­மூ­லம் உற்­பத்தி, வெளி­நா­டு­களுக்கு ஏற்­று­மதி, முத­லீட்டு மையம், உல­க­ளா­விய துணி வழங்­கு­ந­ராக இந்­தியா உரு­வெ­டுக்­கும்,” என்று குறிப்­பிட்ட பியூஸ் கோயல், வேளாண்­மைக்கு அடுத்­த­ப­டி­யாக அதிக அள­வில் வேலை­வாய்ப்­பு­களை வழங்­கும் துறை­யாக துணித் துறை உள்­ள­தா­க­வும் தெரிவித்தார்.

ஏழு ஒருங்­கி­ணைந்த ஆடைப் பூங்­காக்­கள் மூலம் நேர­டி­யா­க­வும் மறை­மு­க­மா­க­வும் 20 லட்­சம் வேலை­வாய்ப்­பு­கள் உரு­வா­கும் என்­றும் நம்­பிக்கை தெரி­வித்த அமைச்சர் பியூஸ் கோயல், காலத்­திற்­கேற்ப ஆடைத் துறையை இப்­பூங்­காக்­கள் வலுப்­படுத்­தும் என்­றார்.

இத்திட்­டத்­துக்­கா­கத் தேர்ந்­தெ­டுக்­கப்­பட்ட மாநி­லங்­கள் குறைந்­தது 1,000 ஏக்­கர் நிலம், தடை­யில்லா மின்­சா­ரம், தண்­ணீர் உள்­ளிட்ட வச­தி­க­ளைச் செய்து தர அனு­மதி வழங்க உள்­ள­தா­க­வும் அவர் தெரி­வித்­தார்.

இத­னி­டையே, தமிழ்­நாட்­டின் விரு­து­ந­கர் மாவட்­டத்தைப் பிரத மரின் மித்ரா பூங்கா திட்­டத்துக்­கா­கத் தேர்ந்­தெ­டுத்து உள்ள தற்­காக பிர­த­மர் நரேந்­திர மோடிக்கு முதல்­வர் ஸ்டா­லின் நன்றி தெரி­வித்­துள்­ளார்.

இது­கு­றித்து, அவர் டுவிட்­ட­ரில் வெளி­யிட்­டுள்ள பதி­வில், “தென் தமிழ்­நாட்­டின் துணித் துறை வளர்ச்­சிக்கு இது பெரும் ஊக்கமாக அமை­யும்.

“தமி­ழக அர­சின் சிப்­காட்­டி­டம் 1,052 ஏக்­கர் நிலம் உள்­ளது. அங்கு இந்­தத் திட்­டத்தைத் தொடங்கி தமி­ழக இளை­ஞர்­க­ளுக்கு வேலை­வாய்ப்பை உரு­வாக்­கத் தயா­ராக உள்ளோம்,” எனக் கூறி­யுள்­ளார்.

உலக அள­வில் ஆடை ஏற்று­ ம­தி­யில் இப்போது இந்தியா ஆறா­வது இடத்­தில் இருந்து வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!