ஆசியாவின் முதல் முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை

ஆசியாவின் முதல் முழுமையான கை மாற்று அறுவை சிகிச்சை

1 mins read
35f97dd9-1b29-46c3-8822-33bd1260b712
-

மும்பை: ஆசி­யா­வி­லேயே முதன்­மு­றை­யாக முழு­மை­யான கை மாற்று அறுவை சிகிச்சை இந்தியா­வில் வெற்­றி­க­ர­மாக மேற்­கொள்­ளப்­பட்­டது.

மும்பை குளோ­பல் மருத்­து­வ­மனை­யைச் சேர்ந்த மருத்­து­வர்­கள் 16 மணி நேர­மாக அந்த அறுவை சிகிச்­சையை மேற்­கொண்டு, நோயா­ளிக்கு இரு­வேறு கைக­ளைப் பொருத்­தி­னர்.

ராஜஸ்­தான் மாநி­லம், அஜ்­மீ­ரைச் சேர்ந்­த­வர் பிரேம ராம். இவர், கடந்த 12 ஆண்­டு­க­ளுக்கு முன்பு வய­லில் வேலை பார்த்த போது, தற்­செயலாக மின்­கம்­பத்­தைத் தொட அவரது உட­லில் மின்­சா­ரம் பாய்ந்­தது.

இதையடுத்து, அவ­ரது உயி­ரைக் காப்­பாற்ற வேண்­டு­மெ­னில், கைகளை வெட்­டியே ஆக­வேண்­டும் என மருத்­து­வர்­கள் கூறி­விட்டதால், ஜெய்ப்­பூர் மருத்­து­வ­மனை­யில் பிரேம ராமின் கைகள் முழு­வ­து­மாக வெட்­டப்­பட்­டன.

செயற்­கைக் கைக­ளைப் பெற இவ­ரின் குடும்­பத்­தி­னர் முயன்றாலும் அவற்றால் எவ்­வேலை­யை­யும் செய்­ய­மு­டி­யாது.

எனினும், பிரேம ராம் நம்­பிக்கை இழக்­கா­மல், மும்பை குளோ­பல் மருத்­து­வ­ம­னை­யில் கை மாற்று அறுவை சிகிச்சைக்கு தம் பெய­ரைப் பதி­வு­செய்­தார்.

இந்­நி­லை­யில், சென்ற மாதம் 9ஆம் தேதி அம்­ம­ருத்­து­வ­ம­னை­யில் இவ­ருக்­குக் கை மாற்று அறுவை சிகிச்சை மேற்­கொள்­ளப்­பட்டு, இம்­மா­தம் 9ஆம் தேதி மருத்­து­வ­ம­னை­யி­லி­ருந்து விடு­விக்­கப்­பட்­டார்.

அடுத்த 18-24 மாதங்­க­ளுக்கு இவர் இயன் சிகிச்­சை­யைத் (பிசி­யோ­தெ­ரபி) தொட­ர­வேண்­டும். 18 மாதங்­களில் இவ­ரது கை ஓர­ளவு செயல்­பாட்­டிற்கு வந்­து­வி­டும் என எதிர்­பார்க்­கப்­ப­டு­வ­தாக 'மிட் டே' செய்தி தெரி­விக்­கிறது.