56,000 பேருக்கு இலவசமாக 'தலைக்கவசம்' வழங்கி சாதனை

56,000 பேருக்கு இலவசமாக 'தலைக்கவசம்' வழங்கி சாதனை

1 mins read
f9184fc3-390f-45a3-a5ef-fb66546d65ba
-

பாட்னா: வாகன விபத்துகளையும் அதனால் ஏற்படும் உயிரிழப்பு களையும் தடுக்கும் வகையில், 56,000 தலைக்கவசங்களை பீகார் ஆடவர் ஒருவர் இலவசமாக வழங்கியுள்ளார்.

'இந்­தி­யா­வின் தலைக்­க­வச மனி­தர்' என்று தம்­மைக் கூறிக்­கொள்­ளும் திரு ராக­வேந்­திர குமார், 36, இணை­ய­வா­சி­க­ளி­டையே பர­வ­லாக அறி­யப்­பட்­ட­வர்.

கடந்த 2014, மார்ச் 28ஆம் தேதி கிருஷ்­ண­குமார் என்ற இவ­ரின் நண்­பர், சாலை விபத்­தில் சிக்கி மாண்­டு­விட்­டார்.

தலைக்­க­வ­சம் அணி­யா­மல் மோட்­டார்­சைக்­கி­ளில் சென்­ற­தால் அவர் தலை­யில் காய­மடைந்து இறந்­து­போ­னார்.

இத­னால் பெரி­தும் மன­முடைந்­து­போ­னார் திரு ராக­வேந்­திரா. அந்­நி­கழ்வு இவ­ரின் வாழ்க்­கை­யையே திசை­மாற்­றி­யது.

அதன்­பின் தமது வேலை­யை­விட்டுவிட்ட இவர், சாலை­யில் தலைக்­க­வ­ச­மின்றி மோட்­டார்­சைக்­கி­ளில் செல்­வோ­ருக்கு இல­வ­ச­மாகத் தலைக்­க­வ­சம் வழங்­கு­வ­தையே வேலை­யா­க்கிக் கொண்டார். கடந்த ஒன்­பது ஆண்­டு­களில் இவர் 56,000 தலைக்­க­வ­சங்­களை இல­வ­ச­மாக வழங்­கி­யுள்­ளார். இதற்­காக இவர் கிட்­டத்­தட்ட ரூ. 2 கோடி வரை செல­வு­செய்­துள்­ளார்.

இதற்­காக நொய்­டா­வி­லி­ருந்த தம் வீட்டை ரூ.52 லட்­சத்­திற்கு விற்­று­விட்­டார்; தம்­மி­ட­மி­ருந்த 14 மின்­னி­லக்க நாண­யங்­களை ரூ.75 லட்­சத்­திற்கு விற்­றார். அத்­து­டன், இவ­ரின் மனை­வி­யும் தம்­மி­ட­மி­ருந்த நகை­களை விற்று ரூ.15 லட்­சம் கொடுத்­தார். கையி­லி­ருந்த சேமிப்பு முழு­வ­தும் தலைக்­க­வ­சம் வாங்­கு­வ­தி­லேயே கரைந்­து­போ­னது.

கடந்த ஒன்­பது ஆண்­டு­களில் 30 பேரின் உயி­ரைக் காப்­பாற்றி இருப்­ப­தா­கச் சொன்­னார் ராக­வேந்­திரா. அண்­மை­யில் இவர் ஆக்ரா-லக்னோ நெடுஞ்­சா­லை­யில் தலைக்­க­வ­ச­மின்றி மோட்­டார்­சைக்­கி­ளில் சென்ற இளை­யர் ஒரு­வரை நிறுத்தி, இல­வ­ச­மா­கத் தலைக்­க­வ­சம் வழங்­கிய காணொளி இணை­யத்­தில் பர­வியது.