செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
4dd67714-f5a0-4983-9639-6e8b6abd787a
-

5 கிலோ எடையில் ராட்சத முள்ளங்கி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த ஞானதேவ் (படம்) என்ற விவசாயியின் நிலத்தில், ஐந்து கிலோ எடையிலான 15 ராட்சத முள்ளங்கிகள் விளைந்துள்ளன. சுரைக்காய்களை விட பெரியதாகத் தோன்றும் இந்த முள்ளங்கிகளின் படங்கள் சமூக ஊடகங்களில் பரவியதை அடுத்து, சுற்றுப்பகுதியில் வசிக்கும் விவசாயிகள் ஞானதேவ் நிலத்துக்கு தற்போது படையெடுத்து வருகின்றனர். "மாட்டுச் சாணத்துடன் சூப்பர் பாஸ்பேட் உரத்தை முள்ளங்கிகளுக்குப் பயன்படுத்துவதால் அவை இவ்வளவு பெரியதாக விளைந்துள்ளன. உணவகங்களுக்கு அவற்றை விற்பனை செய்துவருகிறேன்," என ஞானதேவ் கூறியுள்ளார்.

சரணடைந்தார் வதந்தி பரப்பிய மணீஷ்

பாட்னா: தமிழ்நாட்டில் பணிபுரிந்து வரும் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி காணொளிகளைப் பரவவிட்ட பீகாரைச் சேர்ந்த யூடியூபர் மணீஷ் காஷ்யப் என்ற ஆடவர் பீகாரில் உள்ள ஜகதீஸ்பூர் காவல்நிலையத்தில் நேற்று சரணடைந்தார். அவரைக் காவலில் எடுத்து விசாரிக்க பீகார் காவல்துறையினர் திட்டமிட்டுள்ளனர். இவ்விவகாரம் தொடர்பில் பீகாரில் மட்டும் இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பெண்களுக்கு மகாராஷ்டிர அரசு சலுகை

மகாராஷ்டிரா: தமிழ் நாடு, யூனியன் பிரதேசமான புதுச்சேரி ஆகியவற்றைப் போலவே அரசுப் பேருந்துகளில் பயணம் செய்யும் பெண்களுக்கு மகாராஷ்டிர அரசு சலுகைகளை அறிவித்துள்ளது. அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு 50% கட்டணம் மட்டுமே வசூலிக்கப்படு கிறது. நேற்றுமுதல் இச்சலுகை அமலுக்கு வந்துள்ளது.

கிராமங்களில் 11 கோடி கழிவறைகள்

புது­டெல்லி: இந்தியாவில் 2014ஆம் ஆண்டு ஆட்­சியைப் பிடித்த பாஜக, அதே ஆண்டு அக்­டோ­பர் 2ஆம் தேதி காந்தி பிறந்தநாளில் 'தூய்மை இந்­தியா' திட்­டத்தைத் தொடங்­கி­யது. அத்­திட்­டம் தொடங்கியது முதல், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் யூனியன் பிரதேசங்களிலும் 11 கோடி கழிவறைகளும் 2.23 லட்சம் சமுதாய தூய்மை வளாகங்களும் கட்டப்பட்டுள்ளதாக நீர் வளத்துறை இணை அமைச்சர் பிரகலாத் சிங் பாடேல் தெரிவித்துள்ளார்.