பஞ்சாப் பிரிவினைவாதத் தலைவருக்கு வலைவீச்சு

பஞ்சாப் பிரிவினைவாதத் தலைவருக்கு வலைவீச்சு

2 mins read
3a87f676-22df-48eb-b6d9-91709d8caf39
-

காவல் நிலையத்தைத் தாக்கியவர்; பஞ்சாப்பில் இணையச் சேவை நிறுத்தம்

சண்­டி­கர்: 'வாரிஸ் பஞ்­சாப் டி' என்ற அமைப்­பின் தலை­வர் அம்ரித்­பால் சிங் என்­ப­வ­ரைக் கைது செய்ய பஞ்­சாப் மாநில காவல்­துறை தீவிர நட­வ­டிக்­கை­களை மேற்­கொண்டு வரு­கிறது.

காவல்­து­றை­யி­னர் வரு­வதை எப்­ப­டியோ அறிந்­து­கொண்ட அவர், தப்­பி­யோடி தலை­ம­றை­வாகி உள்­ளார்.

பஞ்­சாப் மாநி­லத்தை இந்தி­யா­வி­டம் இருந்து பிரித்து 'காலிஸ்­தான்' என்ற பெய­ரில் தனி நாட்டை உரு­வாக்­கும் நோக்­குடன் செயல்­பட்ட சில அமைப்­பு­கள் கடந்த காலங்­களில் முடக்­கப்­பட்­டன. எனி­னும் சில வெளி­நா­டு­களில் உள்ள சீக்­கி­யர்­கள் சிலர் இதை நோக்­க­மா­கக் கொண்டு செயல்­ப­டு­கின்­ற­னர்.

'வாரிஸ் பஞ்­சாப் டி' அமைப்­பும் இதே நோக்­கத்­து­டன் செயல்­பட்டு வரு­வ­தா­கப் புகார் எழுந்­துள்­ளது. இதை­ய­டுத்து அந்த அமைப்­பின் தலை­வ­ரான அம்­ரித் பால் சிங்கை கைது செய்ய பஞ்­சாப் காவல்­துறை நட­வ­டிக்கை மேற்­கொண்­டுள்­ளது.

அம்­ரித்­பா­லின் ஆத­ர­வா­ளர்­கள் 78 பேர் கைதான நிலை­யில், வன்­மு­றைச் சம்­பவங்­க­ளைத் தடுக்­கும் வகை­யில் அம்­மா­நி­லத்­தில் திங்­கட்­கி­ழமை வரை இணைய சேவை முடக்கப்­பட்டது.­

நடி­கர் தீப் சித்து என்­ப­வர் பஞ்­சாப் மாநி­லத்­தில் 'வாரீஸ் பஞ்­சாப் டே' என்ற அமைப்பு தொடங்கி நடத்தி வந்­தார். கடந்த ஆண்டு பிப்­ர­வரி மாதம் அவர் சாலை விபத்­தொன்­றில் உயி­ரி­ழந்­து­விட்­டார். அதன் பின்னர் அம்­ரித்­பால் அந்த அமைப்­புக்குத் தலை­மை­யேற்­றார்.

கடந்த மாதம் 24ஆம் தேதி அம்­ரித்­பா­லின் நெருங்­கிய கூட்­டா­ளி­யான லவ்­பி­ரீத் சிங் என்­ப­வரை சில குற்றச்­சாட்­டு­க­ளின் பேரில் பஞ்­சாப் காவல்­துறை கைது செய்­தது. இது­கு­றித்து தக­வல் அறிந்த அம்­ரித்­பால் உட­ன­டி­யாக தனது ஆத­ர­வா­ளர்­க­ளு­டன் லவ்­பி­ரீத் சிங் அடைத்து வைக்­கப்­பட்டுள்ள காவல் நிலை­யத்­துக்­குச் சென்றார்.

அப்­போது காவல்­து­றைக்­கும் அவ­ரது தரப்­புக்­கும் இடையே நிகழ்ந்த மோத­லின்­போது ஆறு காவ­லர்­கள் காய­ம­டைந்­த­னர்.

அம்­ரித்­பா­லும் அவ­ரது ஆத­ர­வா­ளர்­களும் பயங்­கர ஆயு­தங்­களைக் கையில் ஏந்­தி­யி­ருந்­த­னர். காவல்­து­றை­யின் தடுப்­ப­ரண்­களை உடைத்து நொறுக்கி முன்­னே­றிய அம்­ரித்­பா­லி­டம் அவ­ரது கூட்­டாளி விடு­விக்­கப்­ப­டு­வார் என உய­ர­தி­கா­ரி­கள் உறு­தி­மொழி அளித்­த­னர்.

வன்­மு­றைக்கு காவல்­து­றை­தான் கார­ணம் என்­றார் அம்­ரித்­பால். இதை­ய­டுத்து மாநில அரசு சட்­டம் ஒழுங்கை காப்­பாற்ற தவ­றி­விட்­ட­தாக எதிர்க்­கட்­சி­கள் சாடின. இந்­நி­லை­யில் அம்­ரித்­பாலை கைது செய்­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை பஞ்­சாப் அரசு தீவி­ரப்­ப­டுத்தி உள்ளது. அவ­ரது ஆத­ர­வா­ளர்­கள் அடுத்தடுத்து கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

ஏழு மாவட்­டங்­க­ளைச் சேர்ந்த உய­ர­தி­கா­ரி­க­ளைக் கொண்டு தனிப்­ப­டை­கள் அமைக்­கப்­பட்டு மாநி­லம் முழு­வ­தும் அம்­ரித்­பால் தேடப்­பட்டு வரு­கி­றார்.

இந்­நி­லை­யில் ஜலந்­தர் பகுதி­யில் அவர் பதுங்கி இருப்­ப­தாகக் கிடைத்த தக­வ­லை­யடுத்து காவல்­து­றை­யி­னர் அங்கு சென்­ற­னர். ஆனால் அங்­கி­ருந்து பாது­காப்பு வாக­னங்­க­ளு­டன் அம்­ரித்­பால் தப்­பி­விட்­டது பின்­னர் தெரி­ய­வந்­தது. சுமார் 25 கிலோ மீட்­டர் தூரத்­துக்கு காவல்­து­றை­யி­னர் அவ­ரைத் துரத்­தி­ய­போது, இறு­தி­யாக இரு­சக்­கர வாக­னம் ஒன்­றில் அவர் தப்­பி­ய­தா­கக் கூறப்­ப­டு­கிறது.