ஜெய்சங்கர்: அசாதாரண சூழலில் இந்திய, சீன உறவு

1 mins read
7b105aba-03c5-42be-aa08-05fb70691006
எல்­லைப் பகு­தி­களில் தொடர்ந்து பதற்­றம் நிலவி வரு­கிறது என்­றும் இது தொடர்­பாக சீனா­வின் புதிய வெளி­யு­றவு அமைச்­ச­ரான கீன் காங்­கு­டன் தாம் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தா­க­வும் டெல்­லி­யில் நடை­பெற்ற மாநாடு ஒன்­றில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார். படம்: ராய்ட்டர்ஸ் -

புது­டெல்லி: இந்­திய, சீன உறவு சவா­லான, அசா­தா­ரண சூழ­லில் உள்­ளது என மத்­திய வெளி­யுறவு அமைச்­சர் ஜெய்­சங்­கர் கூறி­யுள்­ளார்.

எல்­லைப் பகு­தி­களில் தொடர்ந்து பதற்­றம் நிலவி வரு­கிறது என்­றும் இது தொடர்­பாக சீனா­வின் புதிய வெளி­யு­றவு அமைச்­ச­ரான கீன் காங்­கு­டன் தாம் பேச்­சு­வார்த்தை நடத்தி வரு­வ­தா­க­வும் டெல்­லி­யில் நடை­பெற்ற மாநாடு ஒன்­றில் பேசும்­போது அவர் குறிப்­பிட்­டார்.

"பல்­வேறு கட்ட பேச்­சு­வார்த்தை­கள், நட­வ­டிக்­கை­களுக்­குப் பிற­கும் எல்­லை­யோர நிலைமை சீரா­க­வில்லை. இந்­திய ராணு­வத்­தின் கணிப்­பின்­படி, எல்­லை­யில் சீன ராணு­வத்­தின் அச்­சு­றுத்­தல் நீடிக்­கிறது," என்றார் ஜெய்­சங்­கர்.

எல்­லைப் பிரச்­சி­னைக்குத் தீர்வு காண சீனா உரிய நட­வடிக்கை எடுக்க வேண்­டும் என்­றும் பதற்­றத்தை தணிக்­கும் நட­வ­டிக்­கை­களை அந்த நாடு முன்­னெ­டுக்க வேண்­டும் என்­றும் அமைச்­சர் ஜெய்­சங்­கர் வலி­யு­றுத்­தி­னார்.

காங்­கி­ரஸ் மூத்த தலை­வர் ராகுல் காந்தி குழப்­பத்­தில் இருப்ப­தா­கக் குறிப்­பிட்ட அவர், அத­னால்­தான் ராகுல் சீனா­வைப் பாராட்­டிப் பேசு­வ­தாகக் கூறினார்.

"காங்­கி­ரஸ் ஆட்­சிக் காலத்­தில் இந்­தியப் பகு­தி­கள் சீனா­வுக்குத் தாரை­வார்க்­கப்­பட்­டன. இப்­போது அந்த கட்சி எல்லைப் பிரச்­சினை குறித்து பொய்­களைக் கூறி வரு­கிறது," என்­றார் அமைச்­சர் ஜெய்­சங்­கர்.