ராகுல்: வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000

ராகுல்: வேலையில்லா பட்டதாரிகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு மாதம் ரூ.3,000

2 mins read
dac09dd0-7d90-4d42-9717-0256dc3eb1ec
-

பெங்­க­ளூர்: கர்­நா­டகா மாநி­லத்­தில் காங்­கி­ரசை ஆட்­சி­யில் அமர்த்­தி­னால், அங்கு வேலை கிடைக்­கா­மல் தவிக்­கும் பட்­ட­தா­ரி­க­ளுக்கு, அவர்­கள் வேலை­யில் சேரும்­வரை அதி­க­பட்­சம் இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூ.3,000 உத­வித்­தொகை வழங்­கப்­படும் என்று காங்­கி­ரஸ் கட்­சி­யின் ராகுல் காந்தி (படம்) தெரி­வித்­துள்­ளார்.

பெல­காவி நக­ரில் நடை­பெற்ற இளை­யர் காங்­கி­ரஸ் மாநாட்­டில் ராகுல் காந்தி இது­போன்ற பல்­வேறு வாக்­கு­று­தி­களை அளித்­தார். மேலும், வேலை தேடும் பட்­ட­யக் கல்வி படித்­த­வர்­க­ளுக்கு இரண்டு ஆண்­டு­க­ளுக்கு மாதந்­தோ­றும் ரூ.1,500 வழங்­கப்­படும் என்­றும் அவர் தெரி­வித்­தார்.

கர்­நா­ட­கா­வில் விரை­வில் சட்ட­மன்­றத் தேர்­தல் அறி­விக்­கப்­பட உள்ள நிலை­யில், அர­சி­யல் கட்­சித் தலை­வர்­கள் முன்­கூட்­டியே தேர்­தல் பரப்­பு­ரை­யைத் தொடங்கி உள்­ள­னர். அவ்­வ­கை­யில் ராகுல் காந்­தி­யும் முழு­வீச்­சில் தேர்­தல் பரப்­பு­ரை­யில் இறங்­கி­யுள்­ள­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

தேசிய அள­வில் அதி­கம் ஊழல் புரி­யும் அர­சாக கர்­நா­டக பார­திய ஜனதா கட்சி அரசு இருப்­ப­தா­க­வும் 40 விழுக்­காடு கமி­ஷன் கேட்­ப­தாக ஒப்­பந்­த­தா­ரர்­கள் சங்­கம் புகார் கூறி­யதை ராகுல் காந்தி சுட்­டிக்காட்­டி­னார். காவல்­துறை தேர்­வு, துணை பேரா­சி­ரி­யர்­கள் தேர்­வு, துணை பொறி­யா­ளர் தேர்­வு என அனைத்திலும் முறைகேடுகள் தலைவிரித்தாடுகின்றன.

மேலும் பேசிய ராகுல் காந்தி, "எத்­த­னையோ பேர் பிர­த­மர், பா.ஜ.க, ஆர்.எஸ்.எஸ், காவல்­துறை., ஆகி­யோ­ரைப் பார்த்­து பயப்­ப­ட­லாம். ஆனால், எனக்கு சிறி­த­ள­வும் அச்­ச­மில்லை. நான் எவ்­வ­ளவு தாக்­கப்­பட்­டா­லும், என் வீட்­டுக்கு எத்­தனை முறை காவல்­துறை படையை அனுப்­பி­னா­லும் எனக்கு அச்­ச­மில்லை. என்னை யாரா­லும் அச்­சு­றுத்த முடி­யாது. நான் எப்­போ­தும் உண்­மை­யின் பக்­கம்­தான் நிற்­பேன்," என்று கூறி­யுள்­ளார்.