கவிதாவிடம் 10 மணிநேர விசாரணை

கவிதாவிடம் 10 மணிநேர விசாரணை

2 mins read
20aa8cfc-5f85-45db-b21f-27b9d29cd30f
-

புது­டெல்லி: டெல்லி அர­சின் மது­பா­னக் கொள்கை முறை­கேட்­டில் தெலுங்­கானா முதல்­வ­ரின் மகளும் எம்­எல்­சி­யு­மான கவி­தா­வுக்கு (படம்) தொடர்­புள்­ள­தாக கூறி அம­லாக்­கத்­துறை விசா­ரணை நடத்தி வரு­கின்­றது. இது தொடர்­பாக கடந்த 11ஆம் தேதி கவி­தா­வி­டம் டெல்லி அம­லாக்­கத்­துறை கிட்­டத்­தட்ட ஒன்­பது மணி நேரம் விசா­ரணை நடத்­தி­யது. இந்­நி­லை­யில், நேற்று முன்­தி­னம் (மார்ச் 20) மீண்­டும் கவி­தா­வி­டம் விசா­ரணை மேற்­கொண்­டது.

அம­லாக்­கத்­துறை அதி­கா­ரி­கள் அவ­ரி­டம் மது­பா­னக் கொள்கை முறை­கேடு தொடர்­பாக ஏறக்­கு­றைய 10 மணி நேரம் விசா­ரணை நடத்தி கவி­தா­வின் வாக்­கு­மூ­லத்­தைப் பெற்­ற­னர்.

டெல்லி அரசு, கடந்த 2021-22ஆம் ஆண்­டில் புதிய மது­பான கொள்­கையை அறி­மு­கம் செய்­தது. இதில் ஆம் ஆத்மி கட்­சி­யி­னர் ரூ.100 கோடி வரை லஞ்­சம் பெற்­ற­தாக குற்­றச்­சாட்டு எழுந்­தது. இது தொடர்­பாக சிபிஐ, அம­லாக்­கத் துறை தனித்­த­னி­யாக வழக்கு பதிவு செய்து விசா­ரித்து வரு­கின்­றன.

இந்த வழக்­கில் தெலுங்­கானா முதல்­வ­ரும் பிஆர்­எஸ் கட்­சித் தலை­வ­ரு­மான கே.சந்­தி­ர­சே­கர் ராவ் மகள் கவிதா மீதும் குற்­றம் சாட்­டப்­பட்­டுள்­ளது.

கவி­தா­வி­டம் சிபிஐ அதி­கா­ரி­கள் ஏற்­கெ­னவே விசா­ரணை நடத்­தி­னர். கடந்த 11ஆம் தேதி அம­லாக்­கத் துறை அதி­கா­ரி­கள் கவி­தா­வி­டம் சுமார் 9 மணி நேரம் விசா­ரணை நடத்­தி­னர். 16ஆம் தேதி மீண்­டும் ஆஜ­ரா­கு­மாறு உத்­த­ர­விட்­ட­னர்.

ஆனால் இந்த வழக்­கில் கைது செய்­யத் தடை விதிக்க கோரி­யும் சம்­மனை ரத்து செய்­யக் கோரி­யும் உச்ச நீதி­மன்­றத்­தில் தாக்­கல் செய்த மனு நிலு­வை­யில் இருப்­ப­தால், விசா­ர­ணைக்கு முன்­னி­லை­யா­வ­தில் இருந்து விலக்கு அளிக்க கவிதா கோரிக்கை வைத்­தி­ருந்­தார். அதை நிரா­க­ரித்த அம­லாக்­கத் துறை, 20ஆம் தேதி முன்­னி­லை­யாக உத்­த­ர­விட்­டது.

இதன்­படி நேற்று முன்­தி­னம் டெல்லி அம­லாக்­கத் துறை அலு­வ­ல­கத்­தில் கவிதா முன்­னி­லை­யா­னார். அப்­போது, கவி­தா­வின் பினாமி என்று கரு­தப்­படும் ஏற்­கெ­னவே கைதான அருண் ராமச்­சந்­தி­ர­னி­டம் நடத்­திய விசா­ர­ணை­யில் தெரிய வந்த தக­வல்­கள் தொடர்­பாக கவி­தா­வி­டம் கேள்­வி­கள் கேட்­கப்­பட்­ட­தா­கத் தெரி­கிறது.