ஜப்பானிய பிரதமருக்கு சந்தன மர புத்தர் சிலை பரிசளித்த மோடி

ஜப்பானிய பிரதமருக்கு சந்தன மர புத்தர் சிலை பரிசளித்த மோடி

1 mins read
7a702472-a5f0-4a72-a575-cacdb4e92828
-

புது­டெல்லி: கர்­நா­டக கைவி­னைக் கலை­ஞர்களால் உரு­வாக்­கப்­பட்ட சந்­தன மரத்­தா­லான புத்­தர் சிலையை ஜப்­பான் பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வுக்கு பிர­த­மர் நரேந்­திர மோடி பரி­ச­ளித்­தார்.

இந்­தியா வந்­துள்ள பிர­த­மர் கிஷி­டா­வுக்கு இந்­தி­யப் பிர­த­மர் நரேந்­திர மோடி கர்­நா­டக மாநி­லத்­தில் தயா­ரிக்­கப்­பட்ட சந்­தன மர நுண் சிற்­பத்தை பரி­சாக வழங்­கி­னார். சிலை­யின் முன்­புறத்­தில் தியா­னத்­தில் இருக்­கும் புத்­தர் சிலையும் சிலை­யின் பின்­பு­றத்­தில் போதி மரமும் செதுக்­கப்­பட்­டுள்­ளது.

சந்­தன மரத்­தில் மிக­வும் நுண்­ணிய வேலைப்­பா­டு­க­ளு­டன் கர்­நா­டக கைவி­னைக் கலை­ஞர்­க­ளால் இது உரு­வாக்­கப்­பட்­டுள்­ளது.

இந்த அழ­கிய சிலை, கர்­நா­ட­கா­ மாநிலத்தில் தயா­ரா­கும் புகழ்­பெற்ற 'கடம்­வூடி ஜாலி' பெட்­டி­யில் வைக்­கப்­பட்டு பிர­த­மர் ஃபுமியோ கிஷி­டா­வுக்கு பரி­ச­ளிக்­கப்­பட்­டது.